ஆப்நகரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மனதில் இடம்பிடித்த உபர்!

உபர் வாடகை கார் நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு சேவையைத் தொடங்கியுள்ளது.

TNN 1 Nov 2017, 6:52 pm
உபர் வாடகை கார் நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு சேவையைத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil uber launches special cabs for differently abled elderly in bengaluru
மாற்றுத்திறனாளிகளுக்கு மனதில் இடம்பிடித்த உபர்!


வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஓலா மற்றும் உபர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், உபர் இந்தியாவில் வாடிக்கையாளர்களிடம் நல்ல எண்ணத்தைப் பெற புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளது.

இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் பிரத்யேகமாக 50 கார்களில் சக்கர நாற்காலிகள் மூலம் ஏறி இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கார்களுக்கு உபர் ஆக்செஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.



மேலும், மடக்கக்கூடிய சாய்வு நாற்காலிகளும் விசாலமான இடவசதியும் கொண்ட 500 கார்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றிற்கு உபர் அசிஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கார்களின் கட்டணம் மற்ற கார்களுக்கு உரியதைப் போலவே இருக்கும் என்றும் உபர் உறுதி அளித்துள்ளது. தற்போது முதல் கட்டமாக பெங்களூரில் மட்டும் இந்த சேவை கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்