ஆப்நகரம்

வேலூர்: பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

வேலூரில் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்கவும் பொதுமக்கள் அதனை சிக்கனமாக பயன்படுத்திய அன்னிய செலவாணி மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Samayam Tamil 20 Jan 2019, 4:03 pm
வேலூரில் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்கவும் பொதுமக்கள் அதனை சிக்கனமாக பயன்படுத்திய அன்னிய செலவாணி மிச்சப்படுத்த கோரி சைக்கிள் விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.
Samayam Tamil vlcsnap-2019-01-20-15h57m39s474


வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகிலிருந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் எரிவாயுபெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் இந்த பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்க கோரி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் கொடியசைத்து துவங்கி வைத்தார் முன்னதாக எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்த இயற்கையாக கிடைக்கும் சூரிய சக்தி காற்றின் சக்தி ஆகியவற்றை பயன்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த பேரணி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் மாநில ஒருங்கிணைப்பாளரும் செயல் இயக்குநருமான சித்தார்தன் உள்ளிட்டோர் திரளானோர் கலந்துகொண்டனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்