ஆப்நகரம்

வெளியானது Vivo S1-ன் இந்திய விலை நிர்ணயம்; Realme X-க்கு சரியான செக்!

மூன்று Variant-களில் வெளியாகும் Vivo S1 ஆனது மூன்று பின்பக்க கேமரா, 32MP செல்பீ கேமரா என சில மிரட்டலான அம்சங்களை கொண்டுள்ளது.

Samayam Tamil 29 Jul 2019, 12:16 pm
Vivo India நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதன் Vivo S1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் நிறுவனத்தின் முதல் S தொடர் ஸ்மார்ட்போன் ஆகும். விவோ எஸ்1 ஏற்கனவே சில சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்தியாவில் வெளியாகும் மாடலானது சர்வதேச சந்தைகளில் வெளியான மாடலை போன்றே தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil vivo s1 specs and india price


அறிமுகத்தையொட்டி Vivo S1-ன் இந்திய விலை நிர்ணயம் மற்றும் சேமிப்பு மாதிரிகள் சார்ந்த விவரங்கள் லீக் ஆகியுள்ளது. அதன்படி பார்த்தால், விவோ எஸ்1 ஆனது Realme X உடன் கடுமையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அடிப்படை மாடலின் விலை நிர்ணயம்:

Indiashopps.com-ன் படி, Vivo S1 ஆனது இந்தியாவில் ரூ.17,990/- என்கிற புள்ளியில் இருந்து தொடங்கும். இது ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலுக்கானதாக இருக்கலாம் என்றும் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் மூன்று Variant-களில் வெளியாகும் Vivo S1-ன் அடிப்படை மாடலானது 4 ஜிபி அளவிலான RAM மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும். இந்த இடத்தில் Realme X ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலின் விலை (4 ஜிபி RAM + 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு) ரூ.16,999/- ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரண்டு மாடலின் விலை நிர்ணயம்:

இரண்டாவது மாடலானது 6 ஜிபி அளவிலான RAM மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும். இந்த மாடலின் விலை ரூ.19,990 ஆக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி மற்றும் Vivo S1 ஸ்மார்ட்போனின் Top-End மாடலானது 8 ஜிபி அளவிலான RAM மற்றும் 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும். இது ரூ. 24,990/- என்கிற விலை நிர்ணயத்தின்கீழ் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ப்ராசஸர் மற்றும் டிஸ்பிளே:

Vivo S1-ன் சர்வதேச மாடல் ஆனது Octa-core MediaTek Helio P65 processor-ன் கீழ் சக்தியூட்டப்படுகிறது. மென்பொருளை பொறுத்தவரை, Android Pie அடிப்படையிலான Funtouch OS 9 கொண்டு இயங்குகிறது. விவோ எஸ்1 ஆனது 6.38 இன்ச் அளவிலான முழு எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, Water Drop Notch, மெலிதான பெஸல்கள், 1080 x 2340 Pixel-கள் அளவிலான Screen resolution, மூன்று பின்புற கேமராக்கள் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

கேமரா மற்றும் இதர பிரதான அம்சங்கள்:

பின்பக்கத்தை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை Wide-Angle கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை Depth Sensor கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் செல்பீகளுக்கான 32MP அளவிலான கேமரா உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் In-display fingerprint சென்சார், Face unlock மற்றும் முரட்டுத்தனமான 4500mAh அளவிலான பேட்டரி ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்