ஆப்நகரம்

1GB டேட்டாவின் விலை ரூ.35 ஆக உயரும்? ஆரம்பித்தது அடுத்த டெலிகாம் பஞ்சாயத்து!

Vodafone Idea நிறுவனம் விடுத்துள்ள இந்த கோரிக்கையை பற்றி படித்த பின்னர், நீங்களொரு வோடாபோன் ஐடியா பயனராக இருந்தால், உடனே Jio-விற்கோ அல்லது Airte-லுக்கோ மாறிவிடுவது நல்லது!

Samayam Tamil 28 Feb 2020, 3:36 pm
வோடபோன் ஐடியா அதன் மொபைல் தரவுகளுக்கான குறைந்தபட்ச கட்டணங்களை சுமார் 7 மடங்கு உயரத்தவும், அதாவது 1ஜிபி அளவிலான டேட்டாவிற்கு ரூ.35 என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கவும் மற்றும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1 முதல் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil jio


மேலும் இந்த நடவடிக்கை நிறுவனத்தின் சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்த உதவும் என்றும் வோடாபோன் கூறியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே போகும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் சந்தைப் பங்கு மற்றும் அரசாங்கத்திற்கு ஏஜிஆர் நிலுவைத் தொகையை (AGR dues) போன்ற காரணமாக வோடாபோன் ஐடியா நிறுவனம் பெரிய அளவிலான இழப்புகளை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

Jio பயனர்களுக்கு ஒரு பேட் நியூஸ்; மேலுமொரு ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி குறைப்பு! அடுத்தது Airtel?

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத் தொகையான ரூ.53,000 கோடி ரூபாயை செலுத்த, நஷ்டத்தை ஈட்டிய டெலிகாம் நிறுவனமான வோடாபோன் ஐடியா 18 ஆண்டு கால அவகாசத்தை கோரியுள்ளது, இதில் வட்டி மற்றும் அபராதம் செலுத்துதல் தொடர்பாக மூன்று ஆண்டு கால அவகாசமும் அடக்கம் (அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் படி).

வோடாபோன் ஐடியா தொலைத் தொடர்புத் துறைக்கு எழுதிய கடிதத்தில், டேட்டாவின் குறைந்தபட்ச விலையானது ஜிகாபைட்டுக்கு ரூ.35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணமாக ரூ.50 ஆக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாக தெரிவித்துள்ளது.

இந்த இடத்தில் தற்போதைய மொபைல் டேட்டா விலைகள் 1 ஜிபிக்கு ரூ.4 முதல் ரூ5 என்கிற விகிதத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான ஆதாரங்களின்படி, டேட்டா விலை உயர்வை தவிர்த்து, வோடாபோன் ஐடியா நிறுவனம் வெளிச்செல்லும் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என்றும் நிர்ணயம் செய்ய விரும்புகிறது.

BSNL vs Jio: முதல் முறையாக தோற்றுப்போன ஜியோ; அதுவும் பிஎஸ்என்எலிடம்! சரிகிறதா அம்பானியின் சாம்ராஜ்யம்?

டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற ஆபரேட்டர்களுடன் இணைந்து வோடபோன் ஐடியா அதன் கட்டண திட்டங்களின் விலைகளை 50 சதவீதம் வரை உயர்த்திய மூன்று மாதங்களுக்குள், மீண்டுமொரு அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்துவதற்கான இந்த கோரிக்கையை பொதுமக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வர் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது சார்ந்த உங்களின் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும். மேலும் இது போன்ற டெக் அப்டேட்களுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவை பின்தொடரவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்