ஆப்நகரம்

இந்தியாவில் அறிமுகமான 85-இன்ச் ஸ்மார்ட் டிவி; விலையை சொன்னா நம்புவீங்களா?

85 இன்ச் 4 கே டிஸ்ப்ளே கொண்ட வு மாஸ்டர்பீஸ் டிவி இந்தியாவில் அறிமுகம்... விலையை சொன்னா ஷாக் ஆகிடுவீங்க...

Samayam Tamil 28 Oct 2020, 3:08 pm
ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளாரான வு நிறுவனம் அதன் 85 இன்ச் 4 கே டிஸ்ப்ளே கொண் புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவியின் விலை ரூ.3,50,000 ஆகு மற்றும் இது நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்க கிடைக்கும்.
Samayam Tamil Vu Masterpiece Smart TV 85 inch Model


Redmi 65-inch TV அறிமுகம்: வாங்கத் தூண்டும் விலை; வாய்பிளக்க வைக்கும் ஸ்பெக்ஸ்!

இந்த வு மாஸ்டர்பீஸ் டிவியில் 85 இன்ச், 4 கே எச்டிஆர் டிஸ்பிளே உடன் வருகிறது, இது குவாண்டம் டாட்-ஐ பயன்படுத்துகிறது, அதாவது கியூஎல்இடி தொழில்நுட்பம் மற்றும் புல் அரே லோக்கல் டிம்மிங் உடனான பேக்லைட்டை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியின் அதிகபட்ச ரெஃப்ரெஷ் ரேட் வீகிதம் 120 ஹெர்ட்ஸ் ஆகும் மற்றும் மதிப்பிடப்பட்ட பீக் ப்ரைட்னஸ் 1,000 நைட்ஸ் ஆகும்.

Amazon vs Flipkart : ஒன்பிளஸ் வைத்த ட்விஸ்ட்; குஷியில் பிளிப்கார்ட் ரசிகர்கள்!

இந்த ஸ்மார்ட்டவி கருப்பு மற்றும் அர்மானி கோல்ட் பூச்சு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது றோஸ் கோல்ட் மற்றும் ஷாம்பெயின் ஹின்ட்களையும் கொண்டுள்ளது.

டிவியின் வடிவமைப்பில் அடிவாரத்தில் ஒரு உலோக அலாய் கிரில் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த மற்றும் விவேகமான சவுண்ட்பாரையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த டிவியில் Vu’s Pixelium Glass தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இது ஒளி பிரதிபலிப்புகளை 40% மேம்படுத்துவதன் மூலம் பிரகாசத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, வு நிறுவனத்திடம் இருந்து வரும் இந்த முதன்மை ஸ்மார்ட் டிவியை வு-வின் "புரட்சிகர" ஆல் இன் ஒன் வீடியோ கான்பரன்சிங் சிஸ்டமாக மேம்படுத்தலாம்.

இந்த வு டிவியின் கீழ் நடக்கும் மீட்டிங்கில், ஆட்டோஃபோகஸுடன் 4 கே வைட் அல்லது கூர்மையான கேமரா, விண்டோஸ் 10 இயங்கும் ஒரு உள்ளமைக்கப்பட்ட கோர் ஐ 5 பிசி, வயர்லெஸ் பீம்பார்மிங் மைக்ரோஃபோன் மற்றும் உள்ளமைக்கப்பட்ட டிராக்பேடில் வயர்லெஸ் கீபோர்ட் போன்றவைகளை அணுகலாம்.

ஹூட்டின் கீழ், இந்த டிவி குவாட் கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 9 இல் இயங்குகிறது, இது யூடியூப், நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டால்பி எம்எஸ் 12 மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்டுக்கான ஆதரவுகளை கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்