ஆப்நகரம்

இந்தியாவுக்கான குறைகேட்பு அதிகாரியை நியமித்தது வாட்ஸ்ஆப் நிறுவனம்..!!

மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று இந்தியாவுக்கான குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2018, 7:08 pm
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியாவுக்கான குறைகேட்பு அதிகாரியை வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒருவழியாக நியமித்துள்ளது டெக் உலகில் பாரட்டுதல்களை பெற்றுள்ளது.
Samayam Tamil 20180801T160745Z_1_LYNXMPEE7038H_RTROPTP_3_WHATSAPPFOUNDER
வாட்ஸ்ஆப் குறைகேட்பு அதிகாரி நியமனம்


இந்தியாவில் பரவிய பல வதந்திகளால் நாட்டின் அமைதி நிலை பெரிதும் கேள்விக்குறியானது. அதுகுறித்து ஆராய்ந்த போது பெரும்பாலான வதந்திகள் வாட்ஸ்ஆப் மூலம் பரவியது தெரியவந்தது.

இதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் மெத்தனம் காட்டவே, உச்சநீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்தது.

அதன்படிப்படையில் இந்தியாவுக்கான குறை கேட்பு அதிகாரியாக கோமல் லஹிரி (Komal lahiri) என்பவரை வாட்ஸ் ஆப் நிறுவனம் நியமித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை குறைபாடுகள், புகார்கள் குறித்து மின்னஞ்சல் வாயிலாகவே, செயலி வாயிலாகவோ இவரை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கோமல் லஹிரி, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்