ஆப்நகரம்

WhatsApp Web யூஸர்களுக்கு இதைவிட ஒரு பெரிய குட் நியூஸ் இருக்க முடியாது!

வாட்ஸ்அப் நிறுவனம், அதன் வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் ஆதரவைக் கொண்டு வரவுள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 1:44 pm
வாட்ஸ்ஆப், அதன் பீட்டா பயனர்களுக்காக புதிய 2.2043.7 அப்டேட்டை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆப்பின் வெப் வெர்ஷனுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் ஆதரவைக் கொண்டுவருகிறது. இதன் பொருள் என்னவென்றால், வாட்ஸ்ஆப் வெப் வழியாக வாட்ஸ்ஆப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களை செய்வதற்கான திறன் தற்போது வளர்ச்சியில் உள்ளது என்று அர்த்தம். மேலும் இது வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil WhatsApp 2020 New Features


WhatsApp Tips : மறைமுகமாக ஸ்டோரேஜை நிரப்பும் வாட்ஸ்அப்; நிறுத்துவது எப்படி?

வாட்ஸ்ஆப்பில் வரும் சமீபத்திய பீட்டா அப்டேட்ஸ் மற்றும் புதிய அம்சங்களை பற்றிய தொடர்ச்சியான தகவல்களை வெளியிடும் Wabetainfo தளம் பகிர்ந்து கொண்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, பயனர்கள் வாட்ஸ்அப் வெப்பில் இருந்து அழைப்புகளைப் பெறும்போது, உள்வரும் அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ கூடிய ஒரு விண்டோ காண்பிக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் யாரையாவது அழைக்கும்போது, குறிப்பிட்ட வாட்ஸ்அப் அழைப்பின் ஸ்டேட்டஸை உள்ளடக்கிய ஒரு சிறிய விண்டோ காண்பிக்கப்படும்.

வாட்ஸ்அப் வெப்பில் ஒரு தனிப்பட்ட தொடர்பை அழைக்கும் திறனைத் தவிர்த்து, க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஆதரவைச் சேர்க்கவும் வாட்ஸ்அப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரையிலாக இந்தஅம்சம் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது, ஆனால் வாட்ஸ்அப் விரைவில் அதை வழங்க பரிசீலித்து வருகிறது.

Google Meet இல் இணைந்த புது அம்சம்; ஆஹா இதுக்கு தானே வெயிட் பண்ணோம்!

இப்போதைக்கு, இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்மில் வீடியோ மற்றும் குரல் அழைப்புகளில் கலந்துகொள்ள பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்குத்தான் மாற வேண்டும். ஆனால், வீடியோ / ஆடியோ அழைப்புகளுக்கான ஆதரவு வாட்ஸ்ஆப் வெப்பில் வெளியானதும், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை அடையாமலேயே தங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பணிபுரியும் போதே வாட்ஸ்அப் அழைப்புகளை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்