ஆப்நகரம்

Jio FREE Call: ஜியோவின் 6 பைசா கட்டணம் இன்னும் எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் Reliance Jio நிறுவனம் அதன் IUC கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டதே அது என்னாச்சு?

Samayam Tamil 3 Feb 2020, 11:22 am
நவம்பர் 2019 க்கு முன்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவை போல அதன் சந்தாதாரர்களுக்கு டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை வழங்கும் ஒரு நிறுவனமே இல்லை என்றே கூறலாம்.
Samayam Tamil Jio Free Call 2020


ஆனால் நவம்பர் 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, "இனிமேல் வரம்பற்ற இலவச அழைப்புகள் கிடையாது, மற்ற நெட்வொர்க்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் போது நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்" என்று அறிவித்ததது. அதன் பின்னர் எல்லாமே தலைகீழாக மாறின.

சத்தம் போடாமல் ஜியோ டிவி கேமரா அறிமுகம்; சொன்னதை செய்த" அம்பானி!

நேற்றுவரை நேசிக்கப்பட்ட ஜியோவின் மீதான வெறுப்புணர்வு மெல்ல மெல்ல மேலோங்க தொடங்கியது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட மற்ற டெலிகாம் நிறுவனங்கள் ஜியோவை போலன்றி நாங்கள் முற்றிலும் இலவசமாக அழைப்பு நன்மைகளை வழங்குகிறோம் என்று விளம்பரம் செய்ய தொடங்கின.

அதன் விளைவாக, நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணமானது "கட்டாயத்தின் பெயரால்" நிகழ்த்தப்பட்டுள்ளது. அது கூடிய விரைவில் தகர்க்கப்படும். பின்னர் மீண்டும் முற்றிலும் இலவச அழைப்பு நன்மைகள் வழங்கப்படும் என்று ஜியோ விளக்கமளித்து இருந்தது.

அதே நேரத்தில் டிசம்பர் 2019 க்கு பின்னர், அதாவது 2020 புத்தாண்டுக்கு பின்னர் 6 பைசா என்கிற அழைப்பு கட்டணத்தை ஜியோ வசூலிக்காது என்று கூறப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்ட பின்பும் கூட அது சார்ந்த அறிவிப்புகள் எதுவுமே வெளியாகவில்லை.

பட்ஜெட் பிரச்சனையா? தினசரி 1GB டேட்டா பிளானை தேடுறீங்களா? உங்களுக்கு 4 விருப்பங்கள் இருக்கு!

தற்போது ஜியோவின் IUC அழைப்பு கட்டணங்கள் ஆனது அடுத்த ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, டெலிகாம் டால்க் வழியாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அழைப்புகளுக்கு அப்பால் செய்யும் ஒவ்வொரு அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவது மேலுமொரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏன் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு மட்டும் இந்த கட்டணம்?

உங்களில் பலருக்கு, ஏன் ஜியோ சந்தாதாரர்கள் மட்டும் ஐ.யூ.சி கட்டணம் செலுத்துகிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கலாம். அதற்கான பதில் என்னவென்றால், ஐ.யூ.சி என்பது ஒரு கட்டணமாகும், இது ஒரு ஆபரேட்டரால் மற்றொரு ஆபரேட்டருக்கு அழைப்பை நிகழ்த்துவதற்காக செலுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நெட்வொர்க்கிலிருந்து ஜியோ நெட்வொர்க்கிற்கு அழைப்பு வந்தால், ஏர்டெல் அழைப்பைச் மேற்கொண்டதாக ஜியோவிற்கு நிமிடத்திற்கு 6 பைசா ஐ.யூ.சி கட்டணம் கிடைக்கும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலான சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மாறியபோது தான் ஒரு சிக்கல் உருவானது.

வெறும் ரூ.78 க்கு தினமும் 3GB; மறுகையில் தினமும் 5GB! மிரட்டும் பிஎஸ்என்எல்; ஐயோ பாவம் ஜியோ!

ஜியோ நெட்வொர்க்கில் இருந்து வெளிச்செல்லும் அழைப்புகள் நிறைய நடக்கத் தொடங்கின, ஆகவே, ஜியோ இப்போது ஐயூ.சி கட்டணங்களை பெறுவதை விட அதிகமாக செலுத்தி வருகிறது, இதனால் அதன் வருவாய் குறைந்த்து.

இதற்கிடையில், தொலைத் தொடர்புத் துறையில் உள்ள அனைத்து ஒழுங்குமுறைகளையும் மேற்பார்வையிடும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) zero-IUC regime சாத்தியமாகவில்லை. எல்லாம் சேர்ந்து நிமிடத்திற்கு 6 பைசா என்கிற கட்டணமானது ஜியோ பயனர்களின் தலையின் மேல் வந்து விழுந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்