ஆப்நகரம்

இஸ்லாமியருக்கு வேலை கிடையாது: ஏர்டெல்

ஒருவர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவரது நேர்மையில் நம்பிக்கை இல்லை என்று ஒரு பெண் கூறியது கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 3:52 am
ஒருவர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் அவரது நேர்மையில் நம்பிக்கை இல்லை என்று ஒரு பெண் கூறியது கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
Samayam Tamil airtel_0.


ஒரு பெண் தான் ஏர்டெல் டிடிஎச் மறுஇணைப்புக்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டதாகவும் அப்போது தன்னுடன் பேசிய வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி தவறாகப் பேசியதாகவும் ட்விட்டர் மூலம் ஏர்டெல் நிறுவனத்திடம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்த அந்தப் பெண்ணின் பதிவுக்கு பதிலளித்த ஏர்டெல் வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருவர், ”உடனடியாக இது போன்ற விஷயத்தை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.” என்று தெரிவித்துவிட்டு ஷோயப் என்று தன் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த அந்தப் பெண், ஒரு இஸ்லாமியரான நீங்கள் உங்கள் வேலையில் நேர்மையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றும் ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறும் கூறியிருக்கிறார். பெண்ணின் கோரிக்கையை ஏற்று இஸ்லாமிய ஊழியருக்குப் பதிலாக இந்து ஊழியரை நியமிப்பதாக ஏர்டெல் உறுதி அளித்துள்ளது.

இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்