ஆப்நகரம்

வெறும் ரூ.7,560 க்கு இப்படியொரு மொபைலா? இது கனவா இல்ல நிஜமா?

சியோமி தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 9C மாடலை அறிமுகம் செய்துள்ளது. என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதை முழு விவரங்கள்.

Samayam Tamil 30 Jun 2020, 3:27 pm
பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை கிளப்பிய ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்களை சீன நிறுவனமான சியோமி இன்று அறிமுகம் செய்துது. சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் இந்த சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான விலைக்கு அறிமுகமாகி உள்ளன என்பதே ஆகும்.
Samayam Tamil Redmi 9C Price and Specs


ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7,560 க்கு அறிமுகமாகி உள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி 9A ஸ்மார்ட்போன் ஆனது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.6,325 க்கு அறிமுகமாகி உள்ளது.

ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் தான் 2.3GHz ஆக்டா- கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர் மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

ரெட்மி 9C ஸ்மார்ட்போன் ஆனது ஆரஞ்சு, கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. இக்கட்டுரையில் ரெட்மி 9C ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்பதை பற்றி விரிவாக காண்போம்.

ரெட்மி 9A அறிமுகம்: கனவில் கூட எதிர்பார்க்காத விலை; 5000mAh பேட்டரி வேற!

ரெட்மி 9சி ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் ஆணையு 6.53 இன்ச் அளவிலான எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 1600 x 720 பிக்சல்கள் அளவிலான திரை தெளிவுத்திறன் மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதத்தைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.3GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர் உடனாக IMG PowerVR GE8320 GPU உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஆதரவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது கைரேகை சென்சார், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, எல்இடி ப்ளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 13 மெகாபிக்சல் மெயின் கேமராக்கள் உள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை, 5 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.

ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11 கொண்டு இயங்குகிறது. இது MIUI 12 க்கு மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்