ஆப்நகரம்

நம்ப முடியாத மிட்-ரேன்ஜ் விலையில் ரெட்மி K30 ஸ்பீட் எடிஷன் அறிமுகம்!

சியோமி நிறுவனம் ரெட்மி K30 5G Speed Edition எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் அம்சங்கள் இதோ!

Samayam Tamil 11 May 2020, 7:23 pm
சியோமி தனது ரெட்மி கே 30 தொடரின் கீழ் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ரெட்மி கே30 5ஜி ஸ்பீட் எடிஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி (சுமார் ரூ.21,360 ஆகும். இது வருகிற மே 14 முதல் சீனாவில் விற்பனையை தொடங்குகிறது. இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது White, Blue Red, Purple மற்றும் New Mint ஆகிய வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
Samayam Tamil Redmi K30 5G Speed Edition


ரெட்மி கே 30 ஸ்பீட் எடிஷன் ஆனது சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 768 5ஜி ப்ராசஸர் உடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது 5ஜி ஸ்டான்ட் அலோன் மற்றும் நான்-ஸ்டான்ட் அலோன் (SA / NSA) சப்-6GHz நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது.

இனிமேல் இந்த 2GB ஜியோ பிளான் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது! ஏனென்றால்?

அம்சங்களை பொறுத்தவரை இது 6.67 இன்ச் அளவிலான முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, அது 2400 x 1080 பிக்சல் தீர்மானங்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் எச்டிஆர் 10 மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. ரெட்மி கே 30 ஸ்பீட் எடிஷன் ஆனது 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரியை கொண்டுள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை ரெட்மி கே 30 ஸ்பீட் எடிசனின் க்வாட்-கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 686 லென்ஸ் (எஃப் / 1.89) +8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எஃப் / 2.2) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இதில் ஒரு 20 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற டூயல் செல்பீ கேமரா உள்ளது.

Airtel App இல் "இதை" செய்தால்.. 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா FREE!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான நிறுவனத்தின் கஸ்டம் MIUI 11 உடன் இயங்குகிறது மற்றும் இது 4500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ரெட்மி கே 30 5ஜி ஸ்மார்ட்போனின் பேட்டரியானது 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் / குளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 165.3 x 76.6 x 8.79 மிமீ மற்றும் 208 கிராம் எடையும் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்