ஆப்நகரம்

Mi ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்; மார்ச் 16-ல் அறிமுகமாகப்போவது "இது" தானாம்!

Xiaomi நிறுவனம் வருகிற மார்ச் 16 ஆம் தேதியன்று ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன சாதனம்? இதற்கும் மி 10 தொடர் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்திற்கு என்ன தொடர்பு? வாருங்கள் பார்க்கலாம்.

Samayam Tamil 14 Mar 2020, 11:13 am
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமிக்கு "புதுமைகள்" மீதான காதல் அளவு கடந்தது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் வருகிற மார்ச் 16 ஆம் தேதியன்று ஒரு அறிமுக நிகழ்வு நடக்கிறது.
Samayam Tamil Mi Wireless power bank


சியோமி நிறுவனம் ஏற்கனவே மி அவுட் டோர் ஸ்பீக்கர், ஒரு ஜோடி டூயல் ட்ரைவர் இயர்போன்கள் மற்றும் ஒரு Mi எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆகியவற்றை உருவாக்கி விற்பனைக்கு திறந்து விட்டுள்ளது. மேலும் சமீபத்தில் டூயல் இன்புட் மற்றும் டூயல் அவுட் போட அம்சங்களை கொண்ட ரெட்மி பவர் பேங்குகளையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிலைப்பாட்டில், இந்த பிராண்ட் வருகிற மார்ச் 16, 2020 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்வதற்கான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய தயாரிப்பு வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவு கொண்ட பவர் பேங்க் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சியோமி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் "CutTheCord" என்கிற குறிச்சொல்லை காண முடிகிறது. இதன் வழியாகவே வரப்போவது ஒரு வயர்லெஸ் சார்ஜிங் நன்கு அறிய முடிகிறது.

இந்தியாவில், சியோமி நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள பெரிய ஸ்மார்ட்போன் - மி 10 ஆகும். சியோமி நிறுவனத்தின் மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, ஆகவே தான் இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக சியோமி நிறுவனம் அதற்கு துணைபுரியும் பாகங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்புகிறது போல.

Realme 6i மார்ச் 17-ல் அறிமுகம்; ரூ.10,000-ஐ கையில வச்சிக்கிட்டு ரெடியா இருங்க!

தற்போது வரையிலாக, எதிர்பார்க்கப்படும் புதிய வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் இல்லை.

இருப்பினும், இது சமீபத்தில் தொடங்கப்பட்ட ரெட்மி பவர் பேங்கில் இருப்பது போன்றே டூயல் இன்புட் மற்றும் டூயல் அவுட்புட் அம்சங்களுடன் வரலாம். மேலும் இது தடையாய்-வே வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய மார்ச் 16 வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ரெட்மி பவர் பேங்குகள்:

சியோமி சமீபத்தில் தனது ரெட்மி வரிசையின் கீழ் இரண்டு பவர் பேங்குகளை அறிமுகப்படுத்தியது. இந்த பட்ஜெட் பவர் பேங்குகள் இரண்டு வகைகளில் வருகின்றன. முதலாவது 10,000 எம்ஏஎச் ஆகும், இது டூயல் இன்புட் மற்றும் டூயல் அவுட்புட் திறன்களுடனான 10W டூ-வே சார்ஜிங்கை கொண்டுள்ளது. மற்றொன்று 18W டூ-வே ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஒரு பெரிய 20,000mah பவர் பேங்க் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி M30s போனின் 4GB + 128GB மாடல் விற்பனை ஆரம்பம்; விலை இவ்ளோதானா?

இந்த இரண்டு ரெட்மி பவர் பேங்குகளுமே வியரபிள்ஸ் மற்றும் அக்ஸசெரீஸ்களுக்கு அதன் லோ சார்ஜிங் மோட் வழியாக மற்றும் 12-அடுக்கு சுற்று பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் சக்தியூட்டும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சிறிய 10,000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் ரூ.799க்கு கிடைக்கிறது. பெரிய 20,000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் ரூ.1,499க்கு வாங்க கிடைக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்