ஆப்நகரம்

இந்த Mi Phone மீது ரூ.1,500 தள்ளுபடி + ரூ.22,259 எக்ஸ்சேன்ஜ் ஆபர்; Amazon அதிரடி!

Xiaomi நிறுவனத்தின் Mi தொடரின் கீழ் வெளியான சற்றே பழைய மாடலான Mi 10i மீது அமேசான் தளம் பல அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. என்னென்ன சலுகைகள், பழைய விலை என்ன, புதிய விலை என்ன, எவ்வளவு தள்ளுபடி, எக்ஸ்சேன்ஜ் ஆபர் விவரங்கள் என்ன, இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன, இதோ முழு விவரங்கள்.

Samayam Tamil 22 Jul 2021, 2:24 pm

ஹைலைட்ஸ்:

  • Mi 10i மீது அமேசான் ஆபர்
  • தள்ளுபடியுடன் எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது
  • என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது, இதோ விவரங்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Mi 10i Amazon Sale
சியோமி Mi 10i இன்று அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. மிக நீண்ட காலத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இப்போது 1,500 ரூபாய் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இது மி 10i விலையை ரூ.20,499 ஆகக் குறைக்கிறது.
இன்று 7.30 மணிக்கு இந்திய அறிமுகம்; OnePlus Nord 2 5G விலை வெளியானது!

இந்தியாவில் Mi 10i விலை:

Mi 10i இந்தியாவில் இரண்டு வகைகளில் வருகிறது. சியோமி இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை ரூ.21,999 க்கு விற்பனை செய்கிறது. ஸ்மார்ட்போனின் டாப்-எண்ட் மாடல் ஆன 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது ரூ.23,999 க்கும் செய்யப்படுகிறது.

Samsung A22 5G விலை: தம்பி Realme, Oppo.. கொஞ்சம் ஓரம்போ; அண்ணன் வராரு!

Mi 10i ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை:

அமேசான் தளம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் (எஸ்பிஐ) இணைந்து ரூ.1500 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. இது இந்தியாவில் ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கிறது. எஸ்பிஐ வங்கி சலுகையைப் பயன்படுத்திய பிறகு, மி 10i ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடலை ரூ.20,499 என்கிற குறைந்த விலையில் கைப்பற்றலாம். மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் கொண்ட டாப்-எண்ட் மாடல் மீது இதே வங்கி சலுகையைப் பயன்படுத்திய பிறகு அதை ரூ.22,499 க்கு வாங்க கிடைக்கும்.

Mi 10i எக்ஸ்சேன்ஜ் சலுகை:

அமேசான் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.22,259 வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை அளிக்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போனின் இறுதி பரிமாற்ற மதிப்பு Mi 10i-ஐப் பெற நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் ஸ்மார்ட்போன் மாடல், பிராண்ட் மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அமேசான் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியையும் வழங்குகிறது.

Mi 10i மீதான மற்ற அமேசான் தள்ளுபடிகள்:

அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் அமேசான் தளம் நோ காஸ்ட் இஎம்ஐ-யையும் வழங்குகிறது

அட்லாண்டிக் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் பசிஃபிக் சன்ரைஸ் உள்ளிட்ட மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும்.

Mi 10i ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மற்றும் ப்ராசஸர்:

அம்சங்களை பொறுத்தவரை, Mi 10i ஸ்மார்ட்போன் MIUI 12 மூலம் இயங்குகிறது. இது 6.67 இன்ச் அளவிலான புல்-எச்டி+ டிஸ்பிளேவை, 1080 x 2400 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், என்.டி.எஸ்.சி 84 சதவீதம் கலர் கேமட் (வண்ண வரம்பு), 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 1500: 01 கான்ராஸ்ட் ரேஷியோ ஆகியவர்களுடன் கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே HDR மற்றும் HDR10 + க்கு இணக்கமானது. இது முன்னும் பின்னும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் வழங்குகிறது. உடன் ஸ்மார்ட் கண் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரீடிங் மோட் 3.0, சன்லைட் டிஸ்ப்ளே 3.0 மற்றும் டி.யூ.வி ரைன்லேண்ட் சான்றிதழ் போன்றவைகளும் உள்ளன. இது 8nm- அடிப்படையிலான குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC உடனாக அட்ரினோ 619 ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது, 8 ஜிபி ரேம் வரை மற்றும் 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

Mi 10i ஸ்மார்ட்போனின் கேமராக்கள்:

கேமராக்களை பொறுத்தவரை, மி 10i ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 108 மெகாபிக்சல் சாம்சங் எச்எம் 2 சென்சார் (1/1.52-inch sensor size, 9-in-1 pixel binning, 2.1um super pixel, and f/1.75 aperture + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் (120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எஃப் / 2.2 லென்ஸ்) + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் ஆகியவைகள் உள்ளது.

இதன் பின்புற கேமரா அமைப்பானது ஆறு லாங் எக்ஸ்போஷர் மோட்ஸ், எச்டிஆர், கூகிள் லென்ஸ், நைட் மோட் 2.0, ப்ரோ மோட், பனோரமா, ரா மோட், 4 கே வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பல அம்சங்களை உள்ளன.

முன்பக்கத்தை பொறுத்தவரை, மி 10i ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது . அது எஃப் / 2.45 லென்ஸ் மற்றும் 1.0 மைக்ரான் பிக்சல் அளவை கொண்டது. அம்சங்களை பொறுத்தவரை இந்த செல்பீ கேமராவானது நைட் மோட் 1.0, ஏஐ பியூட்டிஃபை, ஏஐ போர்ட்ரெய்ட் மோட், புல் எச்டி வீடியோ பதிவு மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.

Mi 10i ஸ்மார்ட்போனின் சார்ஜிங் மற்றும் இதர அம்சங்கள்:

Mi 10i ஸ்மார்ட்போன் ஆனது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,820mAh பேட்டரியை பேக் செய்கிறது. சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 30 நிமிடங்களில் 68 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும். மேலும் ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 58 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 5 ஜி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகியவைகளைகொண்டுள்ளது. அளவீட்டில் Mi 10i ஸ்மார்ட்போன் ஆனது 165.38x76.8x9mm மற்றும் எடையில் 214.5 கிராம் உள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ஐபி 53 ஸ்பிளாஸ் ப்ரூஃப் மதிப்பீடு, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் டூயல் (எல் 1 மற்றும் எல் 5) பேண்ட் சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற பிற அம்சங்களையும் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்