ஆப்நகரம்

ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சீரியஸ்; லீக்கான சியோமியின் ‘Mi A2' அம்சங்கள்!

சியோமி நிறுவனத்தின் ‘மி ஏ2’ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து, இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 10 Jun 2018, 4:19 pm
டெல்லி: சியோமி நிறுவனத்தின் ‘மி ஏ2’ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து, இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil Mi A2 Smartphone
மி ஏ2 ஸ்மார்ட்போன்


சீனாவின் சியோமி நிறுவனம், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது ’ஆண்ட்ராய்டு ஒன்’ வகையிலான ஸ்மார்ட்போனை, மி ஏ1 (Mi A1) என்ற பெயரில் வெளியிட்டது.

இந்நிலையில் ’ஆண்ட்ராய்டு ஒன்’ வகையிலான அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போனை மி ஏ2 (Mi A2) என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனை சியோமி நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து, பிரபல கீக்பெஞ்ச் (Geekbench) இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சியோமியின் மி 6எக்ஸ் (Mi 6X) என்ற ஸ்மார்ட்போனில் மாற்றம் செய்து, மி ஏ2 (Mi A2) என வெளியிட உள்ளது.

முன்னதாக மி ஏ1 (Mi A1) ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 8.1 அப்டேட் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மி ஏ2 லைட் (Mi A2 Lite) வெர்ஷனும் சியோமி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அம்சங்களாவன:

* 5.84 இஞ்ச் முழு ஹெச்.டி+ டிஸ்பிளே, ஆக்டோகோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 625 பிராசசர்

* முன்பக்கத்தில் 12 எம்பி பிரைமரி சென்சாரில் 5 எம்பி செல்பி கேமரா, 4000 mAh பேட்டரி

இதேபோல் மி ஏ2 (Mi A2) சிறப்பு அம்சங்களாவன:

* ஸ்நாப்டிராகன் 660 பிராசசர், 12 எம்பி+20எம்பி இரட்டை கேமரா

* 4 ஜிபி / 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஓரியா இயங்குதளம்

Xiaomi Mi A2's alleged features, specs leaked online.

அடுத்த செய்தி

டிரெண்டிங்