ஆப்நகரம்

​ பிக் பஜாரில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4

சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான சியோமி ஆன்லைன் மற்றும் ஷோரூமில் தனது மொபைல்களைவிற்பனை செய்து வந்தநிலையில், தற்போது பிக் பஜாரில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

TOI Contributor 13 Oct 2017, 11:02 pm
சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான சியோமி ஆன்லைன் மற்றும் ஷோரூமில் தனது மொபைல்களைவிற்பனை செய்து வந்தநிலையில், தற்போது பிக் பஜாரில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Samayam Tamil xiaomi mobiles will available in big bazaar
​ பிக் பஜாரில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4


சீனாவின் முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சியோமி, ஆன்லைன் மூலம் அதிகவாடிக்கையாளர்களை சம்பாதித்தது. ஒரு பக்கத்தில் மொபைல் போனின் சிறப்பம்சங்களுக்கு சியோமிபெயர் போனாலும், இன்னொரு பக்கத்தில் அதன் தீபிடிக்கும் சம்பவத்தால் பின்தங்கி உள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் சியோமி மொபைல் வாங்கும் போது, தீபிடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சியோமி நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தும்கூட, அடுத்தடுத்த சம்பவங்கள் ரெட்மி மொபைல்கள் தீபிடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இருந்தபோதிலும், மவுசு குறையாத சியோமி நிறுவனம், தற்போது சென்னையில் தனது ஹோம்ஸ்டோரை துவங்கியது.

இந்நிலையில், சியோமியின் இந்திய தலைவர் மற்றும் சர்வதேச துணை தலைவரான மானு குமார் ஜெயின், தங்களது டுவிட்டர் பக்கத்தில், பிக் பஜாருடன் இணைந்து இந்தியாவில் பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் 240 ஸ்டோர்களில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் போன்களை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்