ஆப்நகரம்

Poco F1: போகோ ஸ்மார்ட்போனுக்கு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி!

சியோமி நிறுவனம் போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

Samayam Tamil 20 Mar 2019, 2:58 pm
சியோமி நிறுவனம் போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.
Samayam Tamil Xiaomi_Poco_F1-variants


சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான போகோ எப் 1 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போனின் விலை 22,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது வர்த்தக உலகில் போட்டியை சமாளிக்க, சியோமி நிறுவனம் அவ்வபோது ஆஃபர்களையும் வாரிவழங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது, சியோமி நிறுவனம் போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு குறுகிய கால சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.. 22,999 ரூபாய் மதிப்புள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன், தற்போது, 20,999 ரூபாய் என்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் இருக்கும். போகோ எப்1 ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், mi.com அல்லது flipkart.com வலைதளத்தில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

போகோ எப் 1 இல் உள்ள அடிப்படை சிறப்பம்சங்கள்:
டிஸ்ப்ளே அளவு: 6.18 இன்ச்
பிராசசர்: Qualcomm® Snapdragon™ 845
சிம்: டூயல் சிம் கார்டுகள் (4ஜி)
ஆண்ட்ராய்டு: 9 பை
ரேம்: 6 ஜிபி
இன்பீல்ட் மெமரி: 128 GB
எக்ஸ்டெர்னல் மெமரி: 256 ஜிபி
கேமரா: டூயல் கேமரா
முன்புற கேமரா: 20 மெகா பிக்சல்
பின்புற கேமரா: 12 மெகா பிக்சல், 5 மெகா பிக்சல்
பேட்டரி சக்தி: 4,000 mAh
சார்ஜர்: அதிவேக சார்ஜ் செய்யும் வசதி

அடுத்த செய்தி

டிரெண்டிங்