ஆப்நகரம்

Mi: பல ஆண்டுகள் கழித்து இந்தியாவில் சியோமி செய்யப்போகும் தரமான சம்பவம்!

பல ஆண்டுகளாக இந்தியாவில் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யாத சியோமி நிறுவனம் இந்தாண்டு அதன் மி 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, உடன் ரெட்மி 9 ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகலாம்.

Samayam Tamil 29 Feb 2020, 2:28 pm
இந்த மாத தொடக்கத்தில், சியோமி நிறுவனம் தனது மி 10 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. ஆச்சரியம் என்னவென்றால், புதிய மி 10 ஸ்மார்ட்போன் ஆனது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டை இந்திய சந்தையிலும் காணவுள்ளது என்பது தான்.
Samayam Tamil Mi 10 Redmi 9 India Launch


சியோமி நிறுவனம் ஒரு முதன்மை மி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பல வருடங்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நீண்ட காலமாக, சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால் அது இந்த ஆண்டு மாறும் என்று தெரிகிறது.

இது தான் உலகிலேயே மிகவும் பிரபலமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

சமீபத்தில் வெளியான 91மொபைல்ஸ் அறிக்கையை நாம் நம்பும் பட்சத்தில், சியோமி அடுத்த மாதம் அதன் மி 10 மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும். துல்லியமாகச் சொல்வதானால், இந்த அறிமுகமானது மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் எங்காவது நடக்கக்கூடும்.

இப்போதைக்கு, ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பற்றிய அதிக தகவல்கள் எங்களிடம் இல்லை. இது மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC கொண்டு இயக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒரே விஷயம்.

அதாவது ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் காணக்கூடிய அதே ப்ராசஸர் கொண்டு இயங்கும். மி 10 ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய எல்லாவற்றையும் நாங்கள் அறிவோம்.


சியோமி மி 10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

அம்சங்களை பற்றி பேசுகையில், சியோமி மி 10 ஆனது 6.67 இன்ச் அளவிலான சூப்பர் அமோலேட் முழு எச்டி+ ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளேவையும் மற்றும் அதில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும், இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் கொண்டுள்ளது. மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான ஆன் போர்டு மெமரி உடனாக ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்டு இயங்குகிறது.

R70: ட்ரிபிள் ரியர் கேமரா, 6.53 இன்ச் டிஸ்பிளே; பட்ஜெட் விலைக்கு இது "வொர்த்து" தான்!

கேமராத்துறையை பொறுத்தவரை, மி 10 ஆனது அதன் பின்புறத்தில் 108 எம்பி அளவிலான முதன்மை சென்சார் + 20 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 12 எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்ட க்வாட்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, எஃப் / 2.0 அபெர்க்ஷர் கொண்ட ஒரு 20 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 11 உடன் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 50W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன ஆதரவுகளுடன் வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்