ஆப்நகரம்

YouTube இல் சைலன்ட்டாக சேர்க்கப்பட்ட 4 புதிய அம்சங்கள் (Android, iOS)!

கெஸ்டர் ஆதரவு உள்ளிட்ட 4 புதிய அம்சங்களை YouTube அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 12:31 pm
கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான YouTube அதன் ஆப்பில் 4 புதிய அம்சங்களை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் அந்த 4 புதிய அம்சங்களும் இன்று முதல் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. YouTube அறிவித்துள்ள நான்கு புதிய அம்சங்களை பற்றிய விவரங்கள் இதோ:
Samayam Tamil YouTube New Features 2020


01. Video Chapter (வீடியோ சேப்டர்) - இந்த அம்சம் முதன்முதலில் மே மாதத்தில் டெஸ்க்டாப் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அம்சமாகும். இப்போது இது ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது.

WhatsApp Tips : மறைமுகமாக ஸ்டோரேஜை நிரப்பும் வாட்ஸ்அப்; நிறுத்துவது எப்படி?

இந்த அம்சம் வீடியோவின் குறிப்பிட்ட செக்ஷன்களை தவிர்க்க பயனர்களை அனுமதிக்கிறது. இனிமேல், பயனர்கள் வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சேப்டர்களின் பட்டியலையும் ஒவ்வொன்றிலும் அந்த சேப்டரில் அவர்கள் என்ன பார்ப்பார்கள் என்பதற்கான Preview Thumbnail உடன் பார்க்க முடியும்.

02. இரண்டு ஐகான்களின் மீதான இடமாற்றம் - யூடியூப்பிற்கான ஆப், ஸ்மார்ட்போன்களில் உள்ள வீடியோ பிளேயருக்கு Caption button-ஐ நகர்த்தியுள்ளது. மேலும், ஆப்பில் இப்போது உங்களுக்கு autoplay toggle அணுக கிடைக்கும், இது பயனர்கள் ஆட்டோபிளே வீடியோக்களை மிகவம் எளிமையாக ஆப் அல்லது ஆன் செய்ய
வழிவகுக்கும்.

03. Gesture support (சைகை ஆதரவு) - இப்போது யூட்யூப் ஆப்பில் full-screen mode-டிற்கான என்டர் மற்றும் எக்ஸிட் சைகை ஆதரவுகள் அணுக கிடைக்கிறது. ஸ்க்ரீனில் மேல் நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் நீங்கள் full-screen mode-டிற்குள் நுழையலாம் மற்றும் கீழ்நோக்கி ஸ்வைப் செய்வதின் மூலம் screen mode-டில் இருந்து வெளியேறலாம்.

ட்ரூ காலரில் இருந்து உங்கள் மொபைல் நம்பரை டெலிட் செய்வது எப்படி? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே?

04. Suggested actions (பரிந்துரைக்கப்பட்ட ஆக்ஷன்ஸ்) - பரிந்துரைக்கப்பட்ட ஆக்ஷன்ஸ் அம்சமானது பயனர்கள் "ஒரு சிறந்த அனுபவத்தை பெற முடியும்" என்று அது நினைக்கும் போதெல்லாம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை சுழற்றச் சொல்லியோ அல்லது வி.ஆரில் வீடியோவை இயக்க சொல்லியோ கேட்கும். இது தவிர்த்து எதிர்காலத்தில் மேலும் சில பரிந்துரைக்கப்பட்ட ஆக்ஷன்ஸ் அம்சங்கள் இதன் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்றும் யூட்யூப் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்