ஆப்நகரம்

Indian Railways: இனி ரயிலில் நிம்மதியாகத் தூங்கலாம் - இந்தியன் ரயில்வே உங்களை எழுப்பி விடும்..!

Indian Railways: ரயிலில் பயணம் செய்யும் போது உங்களால் நன்றாகத் தூங்க முடியவில்லை என்றால், உங்களுக்காக சில ஸ்பெஷல் ட்ரிக்ஸை நாங்கள் கூற விரும்புகிறோம். அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Samayam Tamil 10 Jun 2022, 1:32 pm
Indian Railways: இரவு ரயிலில் பயணம் செய்யும்போது, சுகமான உறக்கம் வேண்டும் என அனைவரும் விரும்புவதுண்டு. பல நேரங்களில் இது அவர்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது. இதற்கு காரணம், இறங்க வேண்டிய இடம் தாண்டி விடுவோமோ என்ற பயம் தான்.
Samayam Tamil indian railways booking.


அடிக்கடி நடுநடுவே எழுந்து எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்று அருகில் இருந்தவர்களையும் தொல்லை செய்வோம். முக்கியமாக இரவு நேரங்களில் தொடர்வண்டி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தான் இந்த நிலை ஏற்படும்.


ஆனால், இனி அவர்கள் பதற்றம் அடைய தேவையில்லை. அதற்கு அவசியமும் இருக்காது. கவலையின்றி ரயிலில் பயணம் செய்யலாம். ஏனென்றால், நீங்கள் இறங்கவேண்டிய தொடர்வண்டி நிலையம் வருவதற்கு முன்பு, உங்களுக்கு இந்தியன் ரயில்வே எச்சரிக்கை மணி கொடுக்கிறது.


உங்களை இலக்கு ரயில் நிலையத்தின் விழிப்பூட்டலை பெற இணையம் தேவையில்லை. அதாவது, இது அனைத்து பயனர்களுக்குமான சேவையாக இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது.


ஏனெனில், பெரும்பாலான பயனர்களிடத்தில் ஸ்மார்ட்போன்கள் இருப்பதில்லை. டெஸ்டினேஷன் அலர்ட் அல்லது வேக்-அப் கால் அமைக்க மொபைலில் நெட்வொர்க் இணைப்பு மட்டும் இருந்தால் போதும்.


இலக்கு விழிப்பூட்டல்களை அமைப்பது மிகவும் எளிதானது. முழு செயல்முறையையும் படிப்படியாகக் கற்றுக்கொள்ளுங்கள்
  1. உங்கள் போனில் டயலரைத் திறக்கவும்.
  2. அதில் 139 என்ற எண்ணை டயல் செய்து வாடிக்கையாளர் உதவி மையத்தின் அலுவலர் பேசும் வரை காத்திருக்கவும்.
  3. இப்போது குறிப்பிட்ட எண்ணைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உதாரணமாக, தமிழ், ஆங்கிலம் என தேவையான மொழிகளை தேர்ந்தெடுக்கலாம்
  5. இதனை அடுத்து, விழித்தெழும் அலாரம் அல்லது சேருமிட விழிப்பூட்டலை அமைக்க எண் 7-ஐ அழுத்தவும்.
  6. உங்களுக்கான அலாரம் செட் செய்யப்பட்டு விடும்.


நீங்கள் இறங்க வேண்டிய தொடர்வண்டி நிலையத்தை ரயில் நெருங்கும்போது, உங்களுக்கு சமிக்ஞை கொடுக்கப்படும். அதுவரை நீங்கள் நிம்மதியாக உறங்கலாம்.


இதுபோன்ற டெக்னாலஜி தொடர்பான டிப்ஸ் & டிரிக்ஸ் செய்திகளுக்கு, தொடர்ந்து சமயம் தமிழ் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்