ஆப்நகரம்

அடச்சே! இப்படியொரு Gmail தந்திரம் இருப்பது நமக்கு தெரியாமல் போச்சே!

ஜிமெயிலில் உள்ள தேவையில்லாத இமெயில்களை 50, 50 ஆக டெலிட் செய்த ஒவ்வொருவரும் "நேரம் பொன் போன்றது" நன்றாக அறிவார்கள்!

Samayam Tamil 21 Sep 2019, 12:52 pm
ஜிமெயில் அதன் பயனர்களுக்கு 1 ஜிபி அளவிலான சேமிப்பகத்தை வழங்குவதன் மூலம், கடந்த 2004 ஆம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கியது. அதன் சேமிப்பகம் ஆனது கடந்த 2005 இல் 2 ஜிபி ஆக பெருகியது, இன்று அது 15 ஜிபி ஆக வளர்ந்துள்ளது.
Samayam Tamil Gmail Tricks


இருப்பினும் கூட, பயனர்கள் தங்கள் மெயில் பாக்ஸில் இடத்தை நிர்வகிப்பதில் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது. அதற்கு பிரதான காரணம்? மெயில் பாக்ஸில் வந்து குவிந்துள்ள தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள் தான்!

உங்கள் மெயில் பாக்ஸிற்கு வரும் ஒவ்வொரு இமெயிலையும் சேமித்து வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும். ஒருவேளை உங்களுக்கு வரும் அனைத்துமே மிகவும் முக்கியமான மெயில்கள் என்றால், நீங்கள் 5 மாதம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஜிமெயில் ஸ்பேஸ் சொல்யூஷனை பயன்படுத்திக் கொள்ளலாம், இது மாதம் 100ஜிபி அளவிலான சேமிப்பகத்தை உங்களுக்கு வழங்கும்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த இரண்டு Google Maps "தந்திரங்களையும்" தெரியும்! (பாகம் 1)

ஆனால் நீங்கள் எந்த பணத்தையும் செலவழிக்கும் மனநிலையில் இல்லை என்றால், அதே சமயம் உங்கள் மெயில் பாக்ஸில் சிறிது இடத்தை உருவாக்க விரும்பினால், அதற்கு ஒரே வழி - தேவையற்ற மின்னஞ்சல்களை அகற்றுவது மட்டுமே!

தற்போது வரையிலாக ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை டெலிட் செய்வது சாத்தியமில்லை. ஜிமெயில் ஆனது ஒரு பக்கத்தில் 50 மின்னஞ்சல்களை மட்டுமே காண்பிப்பதால், அதை விட அதிக எண்ணிக்கையிலான இமெயில்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.

ஒருவேளை உங்களிடம் முக்கியமான மெயில்களை விட முக்கியமற்ற மற்றும் ஸ்பேம் மெயில் தான் அதிகமாக உள்ளது என்றால், அதில் ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள் இருந்தால் என்ன செய்வது? முதலில் 50 இமெயில்கள், பின்னர் அடுத்த 50 என்று தான் டெலிட் செய்ய வேண்டுமா? ஷார்ட் கட் எதுவும் இல்லையா? ஜிமெயில் தந்திரம் எதுவும் இல்லையா?

Google Chrome-ல் Dark mode-ஐ எனேபிள் செய்வது (Android, iOS, Windows 10 & macOS) எப்படி?

இருக்கிறது! 50க்கும் மேற்பட்ட அதாவது 2000 க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை கூட ஒரே நேரத்தில் தேர்வு செய்து, டெலிட் செய்ய முடியும்! அதெப்படி என்பதை அறிய மற்றும் செயல்படுத்தி பார்க்க கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்:

அனைத்து வகையான Unread email-களையும் டெலிட் செய்வது எப்படி?

01. உங்கள் அக்கவுண்டில் இருக்கும் ஜிமெயிலை திறக்கவும்.

02. ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும்.

03. இப்போது அனைத்து வகையான Unread email-களும் காட்சிப்படும்.

04. இப்போது இடது புறமாக காட்சிப்படும் சதுர வடிவிலான பெட்டகத்தை கிளிக் செய்யவும்.

05. அதில் All என்பதை கிளிக் செய்யவும். இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள 50 இமெயில்கள் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

06. இப்போது இமெயில்களுக்கு மேலே காட்சிப்படும் "select all conversations that match this search." என்பதை கிளிக் செய்யவும்.


07. பின்னர் அனைத்தையும் டெலிட் செய்ய Trash icon-ஐ கிளிக் செய்யவும், அவ்வளவுதான்!

Facebook-ல் உள்ள Facial Recognition அம்சத்தினை முடக்குவது எப்படி?

இப்போது உங்களின் அன்ரீட் மின்னஞ்சல்கள் அனைத்துமே இன்பாக்ஸிலிருந்து நீக்கப்படும். நீங்கள் மின்னஞ்சல்களை நீக்கும்போது, ஜிமெயில் அவற்றை kept for 30 days-க்கு நகர்த்தும், அதன் பிறகு ஜிமெயில் அதை நிரந்தரமாக நீக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்