ஆப்நகரம்

Pongal Wishes: இந்த பொங்கலுக்கு "இதுபோல" புதுசு புதுசா வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்பினால் என்ன?

இந்த Pongal திருநாளுக்கு WhatsApp வழியாக, இதுபோன்ற புத்தம் புதிய Pongal WhatsApp Stickers களை வாழ்த்துக்களாக அனுப்பினால் என்ன?

Samayam Tamil 14 Jan 2020, 11:56 am
தைத்திருநாள் வந்தால் போதும் அதே "பொங்கலோ பொங்கல்" திரைப்படம், அதே பழைய "பொங்கல் தின வாழ்த்துக்கள்" என அரைத்த மாவையே அரைக்கும் கூட்டத்தில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்று விரும்புவாரா நீங்கள்? பாரம்பரியத்தை மாற்ற கூடாது ஆனால் வாழ்த்துக்கள் சொல்லும் வழக்கத்தை, ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஆம் என்றால், கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
Samayam Tamil how to download and send pongal wishes whatsapp stickers in tamil
Pongal Wishes: இந்த பொங்கலுக்கு "இதுபோல" புதுசு புதுசா வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்பினால் என்ன?



முற்றிலும் புதிய பொங்கல் ஸ்டிக்கர்ஸ்!

முன்னதாக கடந்து சென்ற கிறிஸ்த்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டை போலவே வாட்ஸ்ஆப் ஆனது எந்த புதிய பொங்கல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ் தொகுப்பையும் அறிமுகம் செய்யவில்லை. அதனால் என்ன? நாம் சற்று வித்தியாசமான மற்றும் முற்றிலும் புதிய பொங்கல் ஸ்டிக்கர்களை அனுப்பலாம்! அதெப்படி? அதற்கு நீங்கள் சில மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்ஸ்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோட் செய்ய வேண்டி இருக்கும்.


எக்காரணத்தை கொண்டும் வாட்ஸ்அப்பில் "இதையெல்லாம்" செய்யாதீர்கள்; மீறி செய்தால் ஜெயில் தான்!

பொங்கல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ் என்று டைப் செய்யவும்!

ஆண்ட்ராய்டு பயனர்களை பொறுத்தவரை, கூகுள் பிளேவில் Pongal WhatsApp Stickers என்று டைப் செய்து தேடினால் பல மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் ஆப்களை பெறலாம். இந்த மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் ஆப்கள் ஆனது வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற அனைத்து தொடர்புகளுக்கும் பொங்கல் ஸ்டிக்கர்களை அனுப்ப அனுமதிக்கும். அதில் ஒன்றை டவுன்லோட் செய்யவும். இத்தகைய ஸ்டிக்கர் ஆப்களை நிறுவும் முன் குறிப்பிட்ட ஆப் சார்ந்த டெவலப்பர் மற்றும் ரீவ்யூஸ்களை (மதிப்புரைகளை) சரிபார்த்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

ஆப்பிள் பயனருக்கு சின்ன சிக்கல் இருக்கிறது?

ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்படுவதற்கு முன்பு மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் ஆனது சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் இம்மாதிரியான ஸ்டிக்கர் ஆப்ஸ் ஆனது ஐபோன் பயனர்களுக்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆப்பிள் பயனர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு நண்பர்களிடம் இருந்து இந்த புதிய பொங்கல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பெற்று, அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.


பைக், ஸ்கூட்டர் வைத்திருக்கும் பாதி பேருக்கு "இந்த மேட்டர்" தெரியாது! என்னது அது?

டவுன்லோட் செய்த பொங்கல் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி?

- உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் WhatsApp-ஐ திறக்கவும்.

- நீங்கள் பொங்கல் வாழ்த்து கூற விரும்பும் Contact-ற்குள் நுழையவும்

- பின்னர் குறிப்பிட்ட நபரின் Chat box-ஐ கிளிக் செய்யவும்

- இப்போது GIF விருப்பத்திற்கு அருகில் இருக்கும் Square வடிவிலான ஐகானை கிளிக் செய்யவும்

-- அங்கே உங்களிடம் ஏற்கனவே இருக்கும் Stickers-ஐ காண்பீர்கள். அதில் நீங்கள் சமீபத்தில் டவுன்லோட் செய்த பொங்கல் ஸ்டிக்கர்களும் இருக்கும். ஒருவேளை கூடுதல் ஸ்டிக்கர்களை பெற விரும்பினால், திரையில் காட்சிப்படும் “+” ஐகானை கிளிக் செய்யவும்.


தெரியுமா? உங்க செல்பீயை வைத்து நீங்களே வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ரெடி பண்ண முடியும்! அட இது தெரியாம போச்சே!

மை ஸ்டிக்கர்ஸ் தொகுப்பின் கீழ் இருக்கும்!

-- இப்போது உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்கை தேர்வு செய்து, அதை டவுன்லோட் செய்ய அதன் அருகில் உள்ள down arrow விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- தற்போது நீங்கள் டவுன்லோட் செய்த sticker pack ஆனது My Stickers வழியாக அணுக கிடைக்கும், அதில் ஒன்றை தேர்வு செய்து உங்களின் நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது பிற தொடர்புகளுக்கோ பொங்கல் ஸ்டிக்கர்களை அனுப்பலாம், அவ்வளவுதான்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்