ஆப்நகரம்

Tech Tips: டிஆக்டிவேட் செய்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ரிஆக்டிவேட் செய்வது எப்படி?

டிஆக்டிவேட் செய்த மனது ரிஆக்டிவேட் செய்ய நினைப்பதில் எந்த தவறும் இல்லை, மனம் சொல்வதை கேளுங்கள்!

Samayam Tamil 16 Aug 2019, 5:57 pm
தேநீர் தொடங்கி மட்சுடேக் மஷ்ரூம் சூப் வரையிலாக, ஆண்டிபட்டி தொடங்கி அண்டார்டிக்கா வரையிலாக, உள்ளூர் அழகிகள் தொடங்கி உலக அழகிகள் வரையிலாக, ஒன்றையம் விட்டுவைக்காத மற்றும் விட்டுக்கொடுக்காத ஒரு தளம் தான் இன்ஸ்டாகிராம்!
Samayam Tamil Instagram Tips 2019


பேஸ்புக் ஸ்க்ரோலிங் கூட ஒருகட்டத்தில் சலித்துவிடும் - முடிந்துவிடும். ஆனால் "புகைப்படங்களின் உலகமான" இன்ஸ்டாகிராம் இருக்கிறதே? - அடடா! சலிக்கவே சலிக்காது!

நீங்களொரு இன்ஸ்டாகிராம் பயனர் என்றால், சோஷியல் மீடியாக்கள் எப்படி நம்மை அடிமையாக்குகிறது என்பதை நன்கு அறிந்திருக்கலாம். ஸ்க்ரோலிங் செய்து செய்து கட்டை விரல் வீங்கியது தான் மிச்சம் என்ற கடுப்பில் ஒருவேளை நீங்கள் உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டிஆக்டிவேட் செய்து இருந்தால், இப்போது அதற்காக மனம் வருந்தினால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது!

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது FingerPrint Lock அம்சம்; Enable செய்வது எப்படி?

அதிர்ஷடவசமாக, இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஆனது தற்காலிகமாகத்தான் டிஆக்டிவேட் ஆகும். அதாவது அதை மீண்டும் செயல்படுத்துவது மிகவும் எளிது என்று அர்த்தம். கீழ் தொகுக்கப்பட்டுள்ள - இது சில வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளாத - வழிமுறைகளை பின்பற்றவும்.

01. உங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை திறக்கவும்.

02. லாகின் ஸ்க்ரீனில், உங்களின் "அதே" யூசர்நேம் மற்றும் கடவுச்சொல்லை பதிவிடவும்.

03. பின்னர் Login என்பதை க்ளிக் செய்யுங்கள்.

04. அவ்வளவுதான், இப்போது உங்களின் Feed மற்றும் Account ஆனது மெல்ல மெல்ல Restore ஆகும்.


டிஆக்டிவேட் செய்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய, குறைந்தபட்சம் 24 மணிநேரம் காத்திருக்குமாறு இன்ஸ்டாகிராம் அறிவுறுத்தும். ஏனெனில் ஒரு அக்கவுண்ட்டை டிஆக்டிவேட் செய்ய இன்ஸ்டாகிராம் ஏறக்குறைய ஒரு நாள் எடுத்துக்கொள்ளும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்