ஆப்நகரம்

ஐபோனை கீழே தள்ளிவிட்டோம்: பீற்றிக்கொள்ளும் ஹவாய்

ஆப்பிள் ஐபோனை விட அதிகமான மொபைல்களை விற்றுவிட்டதாக சீன மொபைல் நிறுவனம் ஹவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TNN 12 Jun 2017, 5:17 pm
ஆப்பிள் ஐபோனை விட அதிகமான மொபைல்களை விற்றுவிட்டதாக சீன மொபைல் நிறுவனம் ஹவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil this chinese smartphone brand claims to have beaten apple
ஐபோனை கீழே தள்ளிவிட்டோம்: பீற்றிக்கொள்ளும் ஹவாய்


ஆப்பிள் நிறுவனம் உலகில் மிக அதிகமாக மொபைல் போன்கள் விற்கும் நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனத்தை விட அதிகமான மொபைல் போன்களை விற்றுவிட்டதாக சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான விற்பனை அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம் உலகில் உள்ள மொபைல்களில் 13.2 சதவீதம் ஹவாய் மொபைல்கள்தான் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உலக அளவில் 12 சதவீதம் மட்டுமே இருக்கின்றன.

கடந்த டிசம்பர் வரை 139 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளதாகக் கூறிய அந்நிறுவனம் ஐபோனை கீழே தள்ளிவிட்டு முன்னேவிட்டதாக பீற்றிக்கொண்டிருக்கிறது.

74 நாடுகளில் மொபைல் விற்பனையின் கொடிகட்டிப் பறக்கும் ஹவாய் நிறுவனம் உலக மொபைல் மார்க்கெட்டில் முதல் இடத்தில உள்ள சாம்சங் மொபைல்ஸ் நிறுவனத்தை பல நாடுகளில் முந்திவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

அடுத்த செய்தி