ஆப்நகரம்

இனி காரை தரையில் ஓட்டாதீங்க; வானில் ஓட்டுங்கள்: வந்தாச்சு அடுத்த அசத்தல்

வானில் பறக்கும் புதிய காரை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

TNN 25 Apr 2017, 3:04 pm
வாஷிங்டன்: வானில் பறக்கும் புதிய காரை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
Samayam Tamil this is the first footage of a real flying car and the future is closer than we think
இனி காரை தரையில் ஓட்டாதீங்க; வானில் ஓட்டுங்கள்: வந்தாச்சு அடுத்த அசத்தல்


பறக்கும் கார்களை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது லேரி பேஜில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது போக்குவரத்து சாதனங்களின் அடுத்த தலைமுறையின் கண்டுபிடிப்பு. கிட்டி ஹாக் என்ற பெயரில் பறக்கும் கார்களை அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு சிறிய ரக வலைப் போன்று, ஊர்ந்து செல்லும் இரண்டு கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. அதை ஓட்டுவதற்கு யாருக்கும் பைலட் லைசென்ஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த காரை வாங்குவதற்கு, மூன்று ஆண்டுகள் உறுப்பினர் கட்டணமாக 100 அமெரிக்க டாலரை அறிவித்துள்ளது. அதன்மூலம் பறக்கும் காரை வாங்கினால், 2000 அமெரிக்க டாலர்கள் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் இறுதியில் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விலை விற்பனை நாள் தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

This Is The First Footage Of A Real Flying Car And The Future Is Closer Than We Think.

அடுத்த செய்தி