ஆப்நகரம்

தேர்தல் பாதுகாப்பு: சென்னை வந்தடைந்தது துணை ராணுவம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் சென்னை வந்தடைந்தனர்.

TNN 3 May 2016, 3:37 pm
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் சென்னை வந்தடைந்தனர்.
Samayam Tamil tn elections military forces reached chennai for security purpose
தேர்தல் பாதுகாப்பு: சென்னை வந்தடைந்தது துணை ராணுவம்


தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்றுடன் வேட்புமனு தொடர்பான நடைமுறை கள் முடிவடைந்தன. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மொத்தம் 66,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதில், பல வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவை அமைதி யாக நடத்தவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்யவும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 18 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை வந்தடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை முடித்து விட்டு கொல்கத்தாவில் இருந்து, சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் சென்னை வந்துள்ளனர்.

தமிழகம் வந்துள்ள துணை ராணுவப்படையினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 6 கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று சென்னை வந்தடைந்தனர். இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து மேலும் சில கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வரவுள்ளனர்.

அடுத்த செய்தி