ஆப்நகரம்

செல்போன் கோபுர கதிர்வீச்சு ஆபத்து: டிராய் விளக்கம்

செல்போன் கோபுர கதிர்வீச்சு ஆபாயம் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

TOI Contributor 21 Dec 2016, 10:16 pm
சென்னை: செல்போன் கோபுர கதிர்வீச்சு ஆபாயம் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
Samayam Tamil trai allays fears on radiation from mobile towers
செல்போன் கோபுர கதிர்வீச்சு ஆபத்து: டிராய் விளக்கம்


செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக் கும் பிற உயிரினங்களுக்கும் உடல் நலக் கோளாறு ஏற்படும் என்ற சந்தேகமும், அச்சமும் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அதேபோல், செல்போன் அலைகள் சிட்டுக்குருவிகளின் முட்டைகளை சிதைப்பதால், அவற்றின் எண்ணிக்கை சரிந்துவிட்டது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிரான வாதங்களும் உள்ளன.

செல்போன் கதிர்வீச்சால், மனித உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பாதிப்பில்லை என்றும் இரு விதமான வாதங்கள் உள்ளன. நமது மூளைச் செயல்பாடுகள் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இதனால் செல்போன் கோபுரங்கள் அருகே வாழும் மக்களுக்கு தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேநேரம், இதனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள், ஏற்படுவதை உறுதிப்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகள் இன்னும் நடக்க வில்லை.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முதன்மை ஆலோசகர் சுனில் பாஜ்பாய், செல்போன் கோபுர கதிர்வீச்சு ஆபாயம் குறித்து பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. ஆனால், அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மின்காந்த கதிர்வீச்சுகள் இல்லை. காரணமற்ற அச்சத்தை மக்கள் கொள்ளத் தேவையில்லை என்றார்.
Trai allays fears on radiation from mobile towers

அடுத்த செய்தி