ஆப்நகரம்

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்கம்

குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 29 Jul 2018, 8:41 am
குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
Samayam Tamil Tamil-Daily-News-Paper_362418770791


நெல்லை குற்றாலத்தில் சாரல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்று சாரல் திருவிழாவைத் தொடங்கிவைத்தனர்.

முதல் நாளில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. ரூ.24.65 கோடி வருவாய் கிடைத்திருப்பது சுற்றுலாத்துறையின் வரலாற்றில் சாதனை” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இன்று, சாரல் திருவிழாவில் தோட்டக்கலை கண்காட்சியும், நாய்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. படகுப்போட்டி, ஓவியப் போட்டி, நீச்சல் போட்டி, கோலப்போட்டி என பல விதமான போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

அடுத்த செய்தி