ஆப்நகரம்

Agastya Muni : பெருங்கடலையே குடித்தவர் இங்குதான் வாழ்ந்துகொண்டிருக்கிறாராம்!

திருவனந்தபுரத்திலிருந்து 35.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலையின் முகப்பு. இங்கிருந்துதான் மலையின் உச்சியில் ஏற வேண்டும்

Samayam Tamil 27 Jan 2020, 11:19 am
அரக்கர்கள் புவியில் வாழும் மக்கள் மற்றும் வானில் வாழும் தேவர்கள் என அனைவரையும் துன்புறுத்தி வந்துள்ளனர். இவர்களை அழித்தொழிப்பதற்கு வாயு மற்றும் அக்னி தேவர்கள் ஒன்றிணைந்து அகத்தியராக மண்ணில் தோன்றி ஒட்டு மொத்த கடல் நீரையும் குடித்து வற்றச் செய்தாராம். இதனால் கடலில் இருந்த அரக்கர்கள் மாண்டனர் என்று புராண வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. அவர் தமிழகத்தில் வாழ்ந்த இடத்துக்குத்தான் நாம் இப்போது செல்லவிருக்கிறோம்.
Samayam Tamil lets-go-to-agathiyar-temple-for-a-wonderful-tour


தமிழகம் மற்றும் கேரளம் மாநிலங்களுக்கு இடையில் சரியாக எல்லையில் அமைந்துள்ளது இந்த மலைத் தொடர்.. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஒரு அழகிய மலையாக அமைந்துள்ளது இந்த அகத்திய மலையும். நெய்யாறு காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் இவை அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இது காண்பதற்கு வாயைப் பிளக்கச் செய்யும் உயரம் கொண்டது ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1868 மீ உயரம் கொண்டது இந்த மலை. பொதிகை மலை என்றும் அழைக்கப்படும் இந்த மலைத் தொடருக்கு இன்னும் ஒரு சிறப்பு உண்டு. பார் போற்றும் தாமிர பரணி ஆறு இந்த மலையில் தான் உற்பத்தியாகி, பாபநாசமாகவும், பொருநை நதி எனும் பெயரிலும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி ஓடி கடலில் கலக்கிறது.

அகத்திய முனியை காண விரும்புபவர்கள் செங்குத்தான பாதைகள், ஓடைகளை கடந்து 3 நாட்கள் நடந்தால் கோவிலை அடையலாம். இப்போது மிக விரைவில் நடந்து கோவிலை அடைவதற்கான வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. மூலிகைகள் நிறைந்து செழித்திருக்கும் இந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்வதன் மூலம் உங்களது உடலுக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும். கவலைகள் மறந்து மறுமலர்ச்சியான முகம் தோன்றும். உங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள அலுப்புகளும் மறைந்து விடும்.

அகத்தியர் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் ஜனவரி முதல் மே மாதம் வரை அதிகம் வருகை புரிகின்றனர். இவர்கள் அகத்திய முனியை தரிசித்து அவருக்கு சிறப்பு பூசைகள் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதாக கருதுகின்றனர்.

எப்போது செல்லலாம்

ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே

எப்படி அடைவது

திருவனந்தபுரத்திலிருந்து 35.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலையின் முகப்பு. இங்கிருந்துதான் மலையின் உச்சியில் ஏற வேண்டும்

போனகாடு பகுதிக்கு, உங்கள் அருகாமை அல்லது திருவனந்தபுரம் நகர பகுதியிலிருந்து சுய வாகனம் அல்லது வாடகை வண்டிகளில் பயணிக்க வேண்டும். இங்கிருந்து 15 நிமிட நடையில் நீங்கள் மலையின் அடிவாரத்தை காண முடியும். பின் மலையேற்றத்தை தொடங்கலாம்.

சிறப்புகள்

கேரளத்தின் இரண்டாவது உயரமான சிகரம்

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தளம்

2000க்கும் அதிகமான அளவில் மூலிகைகள் காணப்படும் இடம்

போனா நீர்வீழ்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது

ஒரு நாளைக்கு முழு உடல் தகுதியுடன் கூடிய 100 நபர்கள் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி