ஆப்நகரம்

happy birthday bharathi : பாரதியாருக்கும் எட்டப்பனுக்கும் இப்படி ஒரு சம்பந்தமா?

கட்டபொம்மனை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும், இன்று பிறந்தநாள் கொண்டாடப்படும் பாரதியாருக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகுது என்று நமக்குத் தோன்றும்.

Samayam Tamil 11 Dec 2019, 5:21 pm
அந்த தொடர்பு அவர்களின் பிறந்த ஊர்தான். எட்டப்பனும் சரி, பாரதியாரும் சரி ஒரே ஊரில்தான் பிறந்துள்ளார்கள். அதுதான் எட்டயபுரம். இது எங்குள்ளது, எப்படி செல்வது, சுற்றுலா அம்சங்கள், அருகிலுள்ள காண வேண்டிய இடங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Samayam Tamil EttayapuramPalaceRemains


எங்குள்ளது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்தான் பாரதியார் பிறந்த ஊர். இங்குதான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனும் பிறந்துள்ளார். இது மதுரையிலிருந்து கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது

எட்டயபுரம் பேருந்து, ரயில், விமானம் வாயிலாக அருகாமை பகுதிகளுடன் இணைந்து நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் - எட்டயபுரம், கோவில்பட்டி

அருகிலுள்ள ரயில் நிலையம் - கோவில் பட்டி

சாலை வழியாக பயணிப்பவர்கள் மதுரையிலிருந்து 82 கிமீ, தூத்துக்குடியிலிருந்து 50 கிமீ பயணித்தால் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது எட்டயபுரம்.

வரலாறு

எட்டயபுரம் ஆதியில் இளச நாடு என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இளமை பொங்கும் அழகிய மலைகளையும், பகுதிகளையும் உள்ளடக்கியிருந்ததால் இது இப்படி அழைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாண்டிய மன்னர்களின் வசம் இருந்த இந்த பகுதி பின்னர் எட்டப்பனை பாளையக்காரனாக கொண்டிருந்தது. எட்டப்பனின் வழித்தோன்றல்களினால் பின்னாளில் இந்த ஊருக்கு எட்டயபுரம் என்ற பெயரே நிலைத்துவிட்டது. இப்போதும்கூட இந்த ஊரை சுருக்கமாக இளசை என்று அழைப்போரும் இருக்கிறார்கள்.


சுற்றுலா அம்சங்கள்

பாரதியார் நினைவு மண்டபம்

பாரதியார் பிறந்த வீடு

முத்துச்சாமி தீட்சிதர் நினைவிடம்

உமறுப்புலவர் தர்கா

எட்டப்பன் அரண்மனை

மாவீரர் அழகுமுத்துக்கோன் அரண்மனை

அருகில் காண வேண்டிய இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
எப்போதும் வென்றான் நீர்த் தேக்கம்
கட்டபொம்மன் நினைவிடம்

அடுத்த செய்தி