ஆப்நகரம்

Panchamukha Anjaneya கோவிலில் ஓர் வினோத உணர்வு வருமாம்! தெரியுமா?

ஐந்து முக ஆஞ்ச நேயர் கோவிலில் ஓர் வினோத உணர்வு வருமாம்

Samayam Tamil 19 Nov 2019, 2:42 pm
ராமேஸ்வரத்தில் சுற்றுலா என்றாலே குழந்தைகள் குஷி ஆகிவிடுவார்கள். ஏனென்றால் இங்கு கடற்கரைகள் அத்தனை அழகு. கூடவே அப்துல்கலாம் பிறந்த மண் என்பதால் கூடுதல் ரசனையும் ஒட்டிக்கொண்டு விட்டதோ தெரியவில்லை. ஆனால் இது குழந்தைகளுக்கான பயணம் அல்ல. அதேநேரம் குழந்தைகளுடன் பெற்றோர்களும் தங்கள் வீட்டில் இருக்கும் மூத்தோர்களை அழைத்துவிட்டு செல்லவேண்டிய ஒரு அழகிய இடம். ஆம்.. நாம் காணவிருப்பது ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைத் தான். இது சிதைவடைந்து திரும்ப கட்டப்பட்ட ஒரு கோவில் இதுவாகும். இங்குதான் அனுமன் ஐந்து முகத்தோடு காட்சி தந்ததாக நம்பப் படுகிறது. சரி வாருங்கள் செல்வோம்.
Samayam Tamil 800px-Shree_Ram_bhakt_Sure_Hanuman_ji


எப்படி செல்வது?


ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு செல்வது மிக எளிமையானது ஆகும். பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த இடம் அமைந்துள்ளது.

முக்கிய தகவல்கள்

இந்த கோவிலில் அமைந்திருப்பது அனுமன் எனும் ஆஞ்சநேயர் ஆகும்.

இவருக்கு ஐந்து முகங்கள் இருப்பதால் பஞ்சமுக ஆஞ்சநேயர் எனும் அழைக்கப்படுகிறார்.

இந்த கோவிலில்தான் மிதக்கும் கல் உள்ளது.

1964 புயல் காரணமாக கடலுக்குள் சென்ற ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இந்த கோவிலில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. ராமர் பக்கத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம் 30 வருடங்களுக்கு மேல் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும்படி பாதுகாக்கப்படுகிறதாம்.

நடை திறப்பு

காலை 6 மணிக்கு திறக்கும் இந்த கோவிலின் நடை மதியம் 12 மணி வரை திறந்திருக்கும். பின் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

வினோத உணர்வு

ராமன், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் ஆகியோரது உருவ சிலைகளும், இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு உள் சென்றவர்களுக்கு ஒரு விநோத உணர்வு ஏற்படுமாம். இது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்தாலும் அனைவருக்கும் இது போன்ற உணர்வு ஏற்படுவது இல்லை.

நுழைவுக் கட்டணம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் ஏதும் தேவையில்லை.

அடுத்த செய்தி