ஆப்நகரம்

Matheran Hills : மும்பை பக்கத்துல 2625 அடி உயரத்துல.. இப்படி ஒரு "வாவ் " இடம்

மாத்தேரானில் சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக முக்கியமான 38 இடங்கள் இருக்கின்றன.

Samayam Tamil 28 Jan 2020, 4:11 pm
மும்பையிலிருந்து 90 கி.மீட்டர் பயணித்தால் மாத்தேரான் என்ற குளிர்பிரதேசத்திற்கு செல்லலாம் . இது ஒரு அழகான மலைப்பகுதி. மாத்தேரான் கடல் பகுதியிலிருந்து 2625 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது வெள்ளைக்காரன் காலத்தில் கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்கச் செல்லும் சுற்றிலாதளமாக இருந்துள்ளது. மாத்தேரானில் சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக முக்கியமான 38 இடங்கள் இருக்கின்றன. இதில் முதலில் பார்க்க வேண்டியது "ஒன் ட்ரீ ஹில்" ஆகும். இது மலையேறுபவர்களுக்கு விருப்பமான இடமாக கருதப்படுகிறது.
Samayam Tamil matheran hill station sun temple toy train best time to visit and more details
Matheran Hills : மும்பை பக்கத்துல 2625 அடி உயரத்துல.. இப்படி ஒரு "வாவ் " இடம்


11.jpg

​அம்பேத்வாடி


அடுத்து மலைவாழ் மக்களைக் காண அம்பேத்வாடி பகுதிக்கு செல்ல வேண்டும் . இந்தப் பகுதியில் மலைவாழ் மக்களின் கிராமங்கள் காணப்படுகின்றன. அம்பேத்வாடி மலை பற்றி தெரிந்துகொள்ள அந்த மழைவாழ் மக்கள் நமக்கு உதவுவார்கள் .

அவர்களிடம் சிறிய தொகை கொடுத்தால் அவர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள் . அவர்கள் உதவுயுடன் நாம் இந்த இடத்தை சுற்றிப்பார்க்கலாம். ஏறத்தொடங்கிய பிறகு நாம் மலையில் ஓடும் ஒரு ஆற்றை கடக்க வேண்டும்.

​ஒன் ட்ரீ ஹில்


இந்த மலைத் தொடரில் ஒன் ட்ரீ ஹில் எனும் பெயரில் குறிப்பிட்ட ஒரு மலை உள்ளது. ஒன் ட்ரீ ஹில் மலைப்பகுதியை நாம் மலை அடிவாரத்தில் இருந்து பார்க்க முடியாது. நாம் மலை ஏற ஏறத்தான் பார்க்க இயலும் . மலையின் நடுபகுதியில் அழகான பீடபூமிக்கு நம்மை அழைத்து செல்கிறது. இதை சுற்றியுள்ள பசுமை நம்மை மயக்கதில் ஆழ்த்தும். நீங்களே இந்த புகைப்படங்களை பாருங்களேன்.

​அழகிய மாத்தேரான்

PC: Udaykumar PR


​​அழகிய மாத்தேரான்


PC:Udaykumar PR


​அழகிய மாத்தேரான்


PC:Udaykumar PR


​அழகிய மாத்தேரான்


PC:Udaykumar PR


​அழகிய மாத்தேரான்


PC:Udaykumar PR


​கிராம தேவதை கோவில்


PC:Udaykumar PR

மலையின் நடுப்பகுதியில் ஒரு கிராம தேவதை கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு ஒரு கதை உள்ளது. இரவில் ஒரு பெண்மணி வழி தெரியாமல் மலைப்பகுதியில் தொலைந்து விட்டாராம். அப்போது அவளை சிலர் வழிதொடர்ந்து சென்று , அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த கிராம தேவதை கோவிலுக்குள்ளே ஒலிந்திருக்கிறார். அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்தவர்கள் கோவிலுக்குள் நுழையாமலே சென்றுவிட்டனர்.

காலைவரை அந்த கோவிலுக்குள் இருந்துவிட்டு அந்தப் பெண் சென்று விட்டாராம். அங்கு இருக்கும் பெண்களின் விருப்ப தெய்வமாக அன்றிலிருந்து அந்த கிராம தேவதை மாறியது.

​செம்ம என்ஜாய்மென்ட்


PC:Jineshpanchal

எப்போது பரபரப்பு, நெரிசல் , இடப்பற்றாக்குறை , கூட்டம் என்று சிக்கித் தவிக்கும் உங்களுக்கு இந்த பசுமையான மலைப்பகுதி செம அனுபவமாக இருக்கும் பாஸ். நா சொன்னா நீங்க எங்க நம்பப் போறீங்க.. ஒரு எட்டு நேர்ல வந்து ரெண்டு, மூணு நாள் டூர் போய்ட்டு வந்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.

அடுத்த செய்தி