ஆப்நகரம்

Madurai Tourism : மதுரையில் உங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் நாயக்கர்களின் கட்டிடக் கலை

திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட மற்றும் ஐரோப்பிய பாணியின் அடிப்படையில் இந்த அரண்மனை கட்டப்பட்டது.

Samayam Tamil 28 Dec 2019, 11:09 am
இன்று காணக்கூடிய கட்டிடமானது, ராஜா வாழ்ந்த பிரதான அரண்மனையாக இருந்தது. நிஜ அரண்மனை வளாகம் தற்போதைய கட்டமைப்பை விட நான்கு மடங்கு பெரியது. மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கே 2 கிமீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது
Samayam Tamil tirumalainayakkar mahal


சொக்கநாத நாயக்கர் கடத்திய பொருட்கள்:

மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நயாக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டடிடங்களை எழுப்பி இருந்தார். அப்போது மதுரை நகரம் இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது. அரண்மனையை கட்டுவதற்கு திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரை பணியில் அமர்த்தியதாக நம்பப்படுகிறது. மன்னர் திருமலை நாயக்கின் பேரன் சொக்கநாத நாயக்கர் அரண்மனையை இடித்து, திருச்சியில் தனது சொந்த அரண்மனையை கட்டும் பொருட்டு நகைகள் மற்றும் மரத்தூண்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

எனினும், சென்னை மாகாண ஆளுநர், லார்ட் நேப்பியர், 1866-72 ஆம் ஆண்டில் ஓரளவிற்கு அரண்மனையில் பராமரத்துப் பணி செய்தார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் பராமரத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று நுழைவு நுழைவாயில், மெயின் ஹால் மற்றும் டான்ஸ் ஹால் ஆகியவை பாதுகாப்பான நிலையில் உள்ளன.

தூண்கள்:

18 ஆம் நூற்றாண்டில் இந்த அரண்மனையின் பகுதியாக இருந்த பல கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன அல்லது அருகிலுள்ள தெருக்களுடன் இணைக்கப்பட்டன. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி.

ரங்க விலாசம், ஸ்வர்க விலாசம்:

இந்த அரண்மனை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஸ்வர்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் ஆகும். அரச குடியிருப்பு, தியேட்டர், சன்னதி, அடுக்கு மாடி குடியிருப்பு, கவசம், குளம் மற்றும் தோட்டம் இந்த இரண்டு பகுதிகளிலும் அமைந்து இருந்தன. நடன மண்டபம் அரண்மனையின் முக்கிய இடமாகும். இங்கு தினமும் நடன நிகழ்ச்சிகளை திருமலை நாயர்க்கர் கண்டு கழித்துள்ளார்.

சுண்ணாம்பு கட்டிடம்:

திருமலை நாயக்கர் கட்டிடம் சுன்னம் எனப்படும் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது.

தேசிய நினைவு சின்னம்:

சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை அரண்மனை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இப்போது தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும்

ஒலியும், ஒளியும்:

இந்த அரண்மனை நகரின் கிழக்குப் பகுதியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

9.00 AM to 5.00 PM பொது வருகை. மதிய உணவு இடைவேளை 01.00 pm to 01.30 pm

அடுத்த செய்தி