ஆப்நகரம்

Rameshwaram bridge : சாலை வழி, ரயில் வழி, நீர் வழி - மூன்றையும் இணைக்கும் பாம்பன் பாலம்!

பாலம், ரயில் செல்வதற்கும், பாலம் திறக்கப்பட்டால், பாலத்தை தாண்டி கப்பல் செல்வதற்கும் பயன்படுகிறது.

Samayam Tamil 29 Jan 2020, 12:04 pm
2.3 கிமீ நீளமுடைய திறக்கும் வடிவிலான ஒரு பாலம் தமிழகத்தையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. பாக் நீரிணையில் அமைந்திருக்கும் இந்த பாலம், ரயில் செல்வதற்கும், பாலம் திறக்கப்பட்டால், பாலத்தை தாண்டி கப்பல் செல்வதற்கும் பயன்படுகிறது.
Samayam Tamil 60984536


எங்குள்ளது

தமிழகத்தின் கிழக்கு முகமாக அமைந்து, இலங்கையுடன் சில மணல் திட்டுகளின் மூலம் இணைந்துள்ள ஒரு பகுதிதான் ராமேஸ்வரம். இந்த ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் ஒரு அழகிய கடற் ரயில் பாலம்தான் இந்த பாம்பன் பாலம். இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பாம்பன் என்று பெயர். அந்த பெயரிலேயே இந்த பாலமும் பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது.

எப்படி செல்வது

ராமேஸ்வரம் செல்லும் அனைவரும் இந்த பாலத்தை காண முடியும். நீங்கள் மதுரையிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு பயணிக்கலாம். இதுபோக ராமேஸ்வரம் செல்ல இன்னும் சில வழிகளும் உண்டு. அனைவற்றையும் பின்னர் காண்போம்.

பாம்பன் பாலம் சிறப்புகள்

இந்திய பெருங்கடலிற்கு மேலே உறுதியாக நின்று கொண்டிருக்கும் பாம்பன் பாலத்தின் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஜெர்மனை சேர்ந்த ஷர்சர் என்ற பொறியியாளர்தான் இதனை கட்டியுள்ளார். இது கப்பலுக்கு வழிவிடும் பாலம்

கடலுக்கு மேல் கட்டபட்ட பாலங்கலில் இந்தியாவிலே இரண்டாவது பெரிய பாலம் பாம்பன் பாலம்தான். பந்தரா ஓர்லி பாலம் முதல் இடத்தில் உள்ளது.

இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ராமேஷ்வரம் கடலில் கப்பல்கள் வரும்போது இந்த பாலம் கப்பலுக்கு வழிவிடும் .

ஜெர்மனை சேர்ந்த ஷர்சர் என்ற பொறியியாளர்தான் இதனை கட்டியுள்ளார். இது போன்ற பாலத்தை இக்காலக்கட்டதில் கூட கட்ட இயலாது என்று நிபுநர்கள் கூறியுள்ளனர்

அன்னை இந்திரா காந்தி பாலம்

இந்த பாலத்தின் அதிகாரப் பூர்வ பெயர் அன்னை இந்திரா காந்தி பாலம் என்பதாகும்.

பேருந்து மற்றும் ரயில் பாலம்

இதே இடத்தில் பேருந்து மற்றும் ரயில் என இரண்டு பாலங்கள் இருக்கின்றன. பாக் ஜலசந்தி எனப்படும் பாக் நீரிணை பகுதியில் 2 கிமீ தொலைவுக்கு நீண்டிருக்கும் இந்த பாலம், இந்திய நிலப் பரப்பையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி