ஆப்நகரம்

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 4 புதிய சாலைத் திட்டங்கள் தொடக்கம்!

தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 4 புதிய சாலைத் திட்டங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 3:39 pm
தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 4 புதிய சாலைத் திட்டங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil tn
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 4 புதிய சாலைத் திட்டங்கள் தொடக்கம்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, ஏராளமான சாலை மேம்பாட்டு திட்டங்கள் தமிழகத்தில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசின் பாரத் மாலா பரியோஜனா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது.

அதன்படி பிள்ளையார்பட்டி வழியாக மேலூர் மற்றும் காரைக்குடி இடையிலான சாலையும், திருமங்கலம் - செங்கோட்டை இடையிலான (151 கி.மீட்டர்) நெடுஞ்சாலை பாதையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் ராஜபாளையம்- ஸ்ரீவில்லிப்புத்தூர் வரையிலான சாலையும் மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 4 புதிய சாலைத் திட்டங்கள் தொடக்கம்!

இதே போல் மதுரை முதல் போடி வரையிலான 44 கிலோ மீட்டர் சாலையும், தஞ்சையுடன் திருப்பத்தூரை இணைக்கும் 85 கிலோ மீட்டர் சாலையும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும் இந்த திட்டங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி