ஆப்நகரம்

தாஜ்மகாலின் அழகு கெடாமல் இருக்க, மேக்கப் போட அரசு முடிவு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், தனது இயல்பு தோற்றமான வெள்ளையிலிருந்து பழுப்பாக மாறி வருகிறது. இப்படி நிறம் மாறுவதிலிருந்து காக்க அரசு ஒரு ஏற்பாடு செய்துள்ளது.

TOI Contributor 6 Apr 2017, 4:23 am
புதுடெல்லி : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், தனது இயல்பு தோற்றமான வெள்ளையிலிருந்து பழுப்பாக மாறி வருகிறது. இப்படி நிறம் மாறுவதிலிருந்து காக்க அரசு ஒரு ஏற்பாடு செய்துள்ளது.
Samayam Tamil govt using mud therapy to preserve taj mahals colour
தாஜ்மகாலின் அழகு கெடாமல் இருக்க, மேக்கப் போட அரசு முடிவு


அழகிய தாஜ்மகால் மஞ்சளாக மாறுவதற்கு காரணம் அதன் சுற்றுப்புறத்தில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தான் என்ற அதிர்ச்சி ஆய்வுமுடிவு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக கடந்த 17ம் நூற்றாண்டில் வெள்ளை மார்பில் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால், பழுப்பு நிறமாக மாறி வருகின்றது. தாஜ்மகாலின் அழகை காக்கும் பொருட்டு மத்திய அரசு அதற்கு ‘Mud Therapy’ செய்ய முடிவெடுத்துள்ளது.

மட் தெரபி என்பது பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க போட்டுக்கொள்ளும் மேக்கப் போன்றது தான். தாஜ்மகால் மீது மட் தெரபி மூலம் பூசப்படும் பூச்சு, அதன் நிறத்தை அப்படியே காத்து, அதன் அழகை அதே பொழிவோடு இருக்க உதவும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி