ஆப்நகரம்

Sriperumbudur ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம் எங்க இருக்கு தெரியுமா?

ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் அவரின் நினைவு மண்டபத்தை பற்றி காண்போம்.

Samayam Tamil 16 Oct 2019, 4:54 pm
ராஜீவ் காந்தி படுகொலை வரலாறு பக்கத்தில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகும். ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக கூறினாலும் ராஜீவ் காந்தி சாதனைகள் பல படைத்தவர். ராஜீவ் காந்தி படுகொலை மர்மங்கள் இன்றளவும் வெளியில் தெரியாமல் இருக்கின்றன. சீமான் வேறு ராஜீவ் கொலையில் கருத்து தெரிவி்து இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறார். நாம் எதையெதையோ பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ராஜீவ் காந்தி இறந்த அந்த இடத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. சரி வாங்க தெரிஞ்சிக்கலாம்.
Samayam Tamil Rajiv_Gandhi_Memorial_blast_site


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம், கொலைசெய்யப்பட்டார். அவர் இறந்த அதே இடத்தில் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, அவரின் சாதனைகளை நினைவு கூற ஏதுவாக வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசாங்கம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தை நினைவு மண்டபமாக மாற்றி பராமரித்து வந்து கொண்டு இருக்கிறது. மத்திய பொதுப்பணித் துறை சார்பாகத்தான் இந்த நினைவு மண்டபம் முதலில் கட்டப்பட்டது. இங்குள்ள உயர்த்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட தளத்தில் அழகிய பிங்க் கிரானைட் கல் ஒன்றில் ராஜீவ் காந்தியின் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது.

வெடிகுண்டி வெடித்த இடத்தை சுற்றிலும் தர்மம், தியாகம், சத்தியம்,விக்யான்,சம்ரிதி, நியாயம், மற்றும் சாந்தி என்னும் பெயரில் ஏழு தூண்கள் இருக்கின்றன. நர்மதா, காவிரி, கங்கை,கோதாவரி, யமுனை, சிந்து, பிரம்மபுத்ரா, ஆகிய இந்தியாவின் ஏழு புன்னிய நதிகளையும் அவை சித்தரிக்கின்றன.

1 ராஜீவ் அணிந்திருந்த உடையின் மிச்சம்

குண்டு வெடிப்பில் உயிரிழந்த ராஜீவ் காந்தி அவர்கள் அணிந்திருந்த உடையின் எஞ்சிய பகுதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


2 ஒளியின் வழி


இந்த வழியாகத்தான் ராஜீவ் நடந்து வந்துள்ளார். பின்னர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.

அடுத்த செய்தி