ஆப்நகரம்

Gandhi : கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தி செல்ல முடியாது - அதிர்ச்சி காரணம்

கன்னியாகுமரியில் ஒரு மிகப் பெரிய விசயம் காந்திஜிக்கு நேர்ந்தது. அதை காந்தி பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை

Samayam Tamil 30 Jan 2020, 4:24 pm
உலகத்தில் எந்தெந்த நாடுகளிலிருந்தெல்லாமோ, சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து அதன் அழகை ரசித்து செல்கின்றனர். கன்னியாகுமரியினைக் காண எத்தனை எத்தனையோ பேர் இன்றும் வந்து கொண்டிருக்கின்றனர். நம் மகாத்மா காந்தியடிகளே தன்னுடைய தமிழக பயணத்தில் மதுரையும், கன்னியாகுமரியும் தனக்கு பிடித்த ஒன்றாக குறிப்பிட்டுள்ளார். (காந்தி வாழ்ந்த காலத்தில் தமிழகம் என்ற ஒன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் கன்னியாகுமரியில் ஒரு மிகப் பெரிய விசயம் காந்திஜிக்கு நேர்ந்தது. அதை காந்தி பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தார்கள் அந்நாட்களில். காந்தியின் சாதியை காரணம் காட்டி, அவரை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றிருப்பார்கள் என்றுதானே நினைக்குறீர்கள் காரணம் அது இல்லை.
Samayam Tamil 800px-AMBAL_KOBURAM
PC: Preus museumPreus museum


1925ம் ஆண்டு காந்தியடிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். உலகில் பல நாடுகளுக்கு சென்ற காந்தியடிகள், பின்னாட்களில் இந்திய நாட்டுக்காக போராடுவதில், ஏழைகளுக்காக வாழ்வதில் குறிக்கோளோடு இருந்தார். போராட்டம், கொள்கை என ஒருபுறம் இருந்தாலும், இறை பக்தி மிக்கவர் காந்தி. அந்நாளில் தமிழகத்துக்கு வருகை தரும்போது கோவில்களுக்கும் சென்று வந்தார். அப்படி ஒரு சமயத்தில்தான் கன்னியாகுமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அட.. இந்த காரணத்தை கேட்டால் இப்போது விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

காந்திஜி தன் சாதியால் கூட வெளியில் நிற்க வைக்கப்படவில்லை. அவர் இங்கிலாந்து சென்று வந்தவர் என்பதற்காக கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லையாம். 1925, மார்ச் 29ம் தேதியிட்ட ஒரு இதழில் இதை காந்திஜியே தெரிவித்திருக்கிறார். தர்சன் ஆப் கன்னியாகுமரி எனும் தலைப்பில் அவர் எழுதிய விசயங்களிலிருந்து இதை தெரிந்து கொள்ள முடிகிறது.

கடலைத் தாண்டி செல்வது இந்து மதத்தில் தீட்டு என்று கூறி காந்தியை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லையாம். காந்தி நுழைந்துவிட்டதால் கன்னியாகுமரி அசுத்தமாகிவிட்டது என்று பேசியவர்களும் அந்நாட்களில் இருந்தார்களாம். அடுத்த 8 ஆண்டுகளிலேயே அந்த நாட்டை ஆண்ட மன்னர் பலராம வர்மா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் சென்று வந்தார்.

உங்களுக்கு தெரியுமா? காந்தி இங்கிலாந்து, உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு கடல் தாண்டி சென்று வந்துள்ளார். அவருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில் கட்டி கும்பிடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

அடுத்த செய்தி