ஆப்நகரம்

Sabarimala போலே இன்னும் நிறைய இடங்கள் இந்தியாவுல! பெண்களுக்கு அனுமதி இல்லை!

சபரி மலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விசயத்தில் போராட்டம் தொடங்கி இன்று வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெரிவிக்க விரும்புகிறோம். சபரி மலை மட்டுமல்ல இன்னும் பல புனித வழிபாட்டு தலங்களிலும் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம். அதுபற்றி பார்க்கலாம் வாருங்கள்.

Samayam Tamil 1 Dec 2019, 9:56 am
சபரி மலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விசயத்தில் போராட்டம் தொடங்கி இன்று வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெரிவிக்க விரும்புகிறோம். சபரி மலை மட்டுமல்ல இன்னும் பல புனித வழிபாட்டு தலங்களிலும் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம். அதுபற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Samayam Tamil sacred places where women not allowed for some reason alike sabarimala
Sabarimala போலே இன்னும் நிறைய இடங்கள் இந்தியாவுல! பெண்களுக்கு அனுமதி இல்லை!


​ஹாஜி அலி தர்கா, மும்பை


ஷரியா சட்டம் பெண்களை வழிபாட்டு தலங்களுக்குள் நுழைய அனுமதிப்பது இல்லையாம். ஹாஜி அலி தர்கா எனும் மும்பையின் முக்கியமான வழிபாட்டு தலத்திலும் கூட இந்த கட்டுப்பாடு உள்ளது. இங்கு பெண்கள் சென்று வழிபடலாம் ஆனால், குறிப்பிட்ட எல்லைகளுக்கு பிறகு பெண்களால் நுழைய முடியாது. அங்கு ஆண்கள் மட்டுமே செல்வார்கள் என்கிறார்கள். கருவறைக்குள் பெண்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது பழைய கதைதான். இன்று எல்லாரும் வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பாம்பே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


​ஜம்மா மசூதி, புது டெல்லி


டெல்லியிலும் குறிப்பிட்ட மசூதியில் பெண்கள் பல ஆண்டுகள் அனுமதிக்கப்படாமலே இருந்துள்ளனர். இங்கு பெண்கள் வழிபட அனுமதிக்கப்பட்டாலும், உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படி யாரும் தடுப்பதில்லை நிச்சயமாக பெண்கள் உள்ளே சென்று வழிபடலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்கள் இரவு நேரங்களில் வழிபடக்கூடாது என்பது அவர்களின் விதியாம்.


​பத்மநாபசுவாமி கோவில்


ஒரு காலத்தில் கீழ் மற்றும் இடைநிலை சாதி மக்கள் இந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை நாம் படித்துள்ளோம். சில தகவல்களின்படி இந்த கோவிலுக்கு கண்டிப்பா பெண்கள் செல்லக்கூடாது என்று சட்டமும் இருந்ததாம். அது உயர் சாதி பெண்களாக இருந்தால், குறிப்பிட்ட எல்லை வரை சென்று வணங்கலாமாம். பின்னாளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகும் கூட அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லையாம். ஆனால் சிலர் இதை மறுக்கின்றனர். இங்கு பெண்கள் சாதி பாகுபாடின்றி அனுமதிக்கப்படுகிறார்கள் எனினும் சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அதன்படி கண்ணியமான முறையில் உடை அணிந்து வந்தால் மட்டும் போதும் என்கிறார்கள்.


​கார்த்திகேயா கோவில்


புஷ்கரில் அமைந்துள்ள கார்த்திகேயா கோவிலுக்கு செல்ல மனிதர்கள் யாரும் தடை விதிக்கவில்லை மாறாக கடவுளே தடை விதித்துள்ளனர். அட என்ன இது புது கதை என்கிறீர்களா? இங்கு சென்றால் பெண்களுக்கு உடல் நல குறைவு உண்டாகிவிடுவதாக கூறுகிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பது இல்லையாம் மாறாக சபித்து விடுகிறார் என பெண்கள் நம்புகின்றனர். இதனால் பெண்களே இங்கு செல்ல தமக்கு தானே தடை போட்டுள்ளனர்.


​​பவானி தீக்ச மண்டபம்


விஜயவாடாவில் அமைந்துள்ள இந்த இடம், ஒரு பெண்ணால் தான் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் அவர் மற்ற எந்த பெண்களையும் இந்த கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என்கிறார்கள். முன்னதாக அவரது தந்தைதான் இந்த கோவிலை நிர்வகித்து வந்துள்ளார். அவர் இறந்த பிறகு வேறு எந்த ஆண் வாரிசும் இல்லாததால் இந்த பெண்ணே நிர்வாகம் செய்யவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்.


அடுத்த செய்தி