ஆப்நகரம்

சென்னையை அடுத்து கொச்சியிலும் இலவச மெட்ரோ ரயில் சேவை!

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், நாளை ஒருநாள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2018, 4:21 pm
கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், நாளை ஒருநாள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil met 1
சென்னையை அடுத்து கொச்சியிலும் இலவச மெட்ரோ ரயில் சேவை!

கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் 1999ல் ஈ.கே நாயனார் அரசு இருக்கும்போது திட்டமிடப்பட்டது. அதன்பின் 2008 ஜனவரியில் அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

சென்னையை அடுத்து கொச்சியிலும் இலவச மெட்ரோ ரயில் சேவை!

அதன்பின் 2013ல் உம்மன்சாண்டி அரசு காலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு, பினராய் விஜயன் முதல்வராக இருக்கும்போது முடிக்கப்பட்டது.

சென்னையை அடுத்து கொச்சியிலும் இலவச மெட்ரோ ரயில் சேவை!

இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி, கொச்சி ஆலுவாவில் இருந்து பாலிவட்டம் வரையிலான(13 கி.மீ) மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அந்தவகையில் கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், பயணிகள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்து கொச்சியிலும் இலவச மெட்ரோ ரயில் சேவை!

மேலும் பயணிகளை கவரும் விதமாக, மெஜிஷியன் கோபிநாத் முத்காண்டின் ’டைம் டிராவலர்-மேஜிக் மெட்ரோ’ என்ற பெயரில் மேஜிக் ஷோவும் நடைபெற்று வருகிறது. வரும் 30-ஆம் தேதி வரை எடப்பள்ளி ரயில் நிலையத்தில், தினமும் பகல் 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி