ஆப்நகரம்

தமிழகத்தின் முக்கிய புனித தளம் தனுஷ்கோடி ஒர் பார்வை

தமிழகத்தின் முக்கியமான புனித தளமாக கருதப்படும் தனிஷ்கோடி பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம் .

Samayam Tamil 2 Jul 2018, 6:01 pm
தமிழகத்தின் முக்கியமான புனித தளமாக கருதப்படும் தனிஷ்கோடி பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம் .
Samayam Tamil images (1)


தனுஷ் என்றால் வில், கோடி என்றால் கடைசி.ராமர் தன் வில்லின் கோடியால் தொட்டு சேதுவின் ஒரு முனையை காட்டினார் என்பதால் இந்த இடத்திற்கு தனுஷ்கோடி என்று பெயர்.

இங்கிருந்து இலங்கைக்கு கடல் வழியாக 18 மைல் தொலைவு. 1964 ல் நடந்த கோர ரயில் விபத்துக்கு முன் சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை போட் மெயில் என்ற விரைவு ரயில் இயக்கப்பட்டது.

தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கையை அடையவும் அப்பொழுது வசதி இருந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நடந்த மிக பெரிய ரயில் விபத்துக்களில் தனுஷ்கோடி ரயில் விபத்தும் ஓன்று.இரவு நேரத்தில் அடித்த சூறாவளி புயலில் சிக்கி தனுஷ்கோடி தீவு முற்றிலுமாக அழிந்தது. ரயில் பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்து ரயில் கடல் நீரில் மூழ்கியது.

டிசம்பர் 23 1964 ல் நடந்த இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 123 பயணிகளும் ,ரயில் ஓட்டுனர்களும் மரணம் அடைந்தார்கள் . இன்று மனிதர்கள் யாரும் வசிக்காத ஒரு இடமாக தனுஷ்கோடி திகழ்கிறது. அழிந்த நிலையில் உள்ள ஒரு மாதா கோவில் இன்றும் அந்த புயலுக்கு சாட்சியாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மணல் வெளி . தார் சாலை முடிவில் சுமார் 6 கி.மீ தூரம் மிகவும் மெலிதான மணல் ஆன பகுதியாக உள்ளது. அதன் கோடியில் இரு கடல் சங்கமம் உள்ளது. அங்கிருந்து தான் ராமரின் வானர சேனை இலங்கைக்கு சேது பாலம் அமைத்தார்கள் என்பது வரலாறு.

ராமர் பாலம் :

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இது மனிதர்களால் கட்டப்பட்டிருப்பது உண்மைதான் என்று ஆராய்ச்சிகளே கூறியிருக்கிறது.

புராணங்களின்படி வானர படையினரால் ராமர் பாலம் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கையைச் சென்றடைய உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர். ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

அடுத்த செய்தி