ஆப்நகரம்

இனிமேல் தாஜ்மஹால் சுற்றுலாத்தலம் இல்லை!

உத்தரப் பிரதேச அரசின் புதிய சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் இடம்பெறாதது என்ற கேள்வி எழுந்துள்ளது.

TNN 3 Oct 2017, 1:32 am
லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் புதிய சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் இடம்பெறாதது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil up government drops taj mahal from tourism booklet
இனிமேல் தாஜ்மஹால் சுற்றுலாத்தலம் இல்லை!


யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப் பிரதேச அரசு புதிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், காசி நகர் முதலிடத்தில் உள்ளது. இந்துக் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் மதுரா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதல்வர் யோகியின் கோரக்பூர் மடம் 4வது இடத்தில் உள்ளது.

காதலின் சின்னமாகப் போற்றப்படும் முகலாய அரசர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹாலுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், அதனை சுற்றுலாத்தலமே இல்லை என்று அறிவிப்பது போல இருக்கிறது என்று விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனிடையே, தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்படவில்லை என்பதால் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி