ஆப்நகரம்

கல்லால் தட்டினால் மணியோசை எழுப்பும் பாறை- வேலூர் காஞ்சனகிரியில் ஆச்சர்யம்

வேலூரில் உள்ள மணிப்பாறையில், கல்லை வைத்து தட்டினால் மணியோசை கேட்கிறது. இதனால் தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2019, 3:04 pm
வேலூரில் உள்ள ஒரு மலைக்கோயிலின் அருகேவுள்ள ஒரு பாறையில் கல்லை வைத்து தட்டினால் மணியோசை கேட்பது பொதுமக்களை பரவசப்படுத்த் வருகிறது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து மக்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
Samayam Tamil Kanchanakiri_Temple_22459


ராணிப்பேட்டையை அடுத்தவுள்ள காஞ்சனகிரி மலைக்கோயில், அம்மாவட்டத்தின் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகவும் உள்ளது. 60 ஏக்கர் பரப்பப்பளவிலான இந்த மலைக்கோயிலில் விநாயகர், ஐயப்பன், 1008 சுயம்பு லிங்கங்களுடன் காஞ்சனகிரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.

உள்ளூர் மக்களால் மிகவும் போற்றதலுக்கு உரிய இடமாக கருதப்படும் இந்த மலைக்கோயிலில் ‘மணிப்பாறை மற்றும் ‘சாம்பிராணி குகை’ ஆகியவை இதற்கு தனி அடையாளங்களை ஏற்படுத்துகின்றன.

அதன்படி, இந்த மலைக்கோயில் உள்ள மணிப் பாறையில் கல்லை வைத்து தட்டினால் மணியோசனை கேட்கிறது. இதை ஆச்சர்யமாக பார்க்கும் மக்கள், பாறையிலிருந்து வரும் மணியோசையை கேட்டு பக்தி பரவசமடைகிறார்கள்.

சித்ரா பௌர்ணமி நாட்களில் காஞ்சனகிரி மலைக்கோயிலுக்கு மக்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். அப்போது கோயிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். மேலும், மற்ற பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது உண்டு.

இயற்கை எழில் சூழ்ந்த காஞ்சனகிரி மலையில் இருந்து வந்த சாம்பிராணி குகை இடி தாக்கியதால் சேதமடைந்துள்ளது. வேலூரின் முக்கிய திருத்தலமாக விளங்கி வரும் காஞ்சனகிரி மலைக்கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி