ஆப்நகரம்

Bigg Boss 6: பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு ஒரு 'ஷாக்கிங் நியூஸ்': மனசை திடப்படுத்திக்கோங்க


பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் பார்க்கலாம் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.

Samayam Tamil 18 Sep 2022, 1:58 pm
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
Samayam Tamil a shocking news for bigg boss tamil 6 viewers
Bigg Boss 6: பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு ஒரு 'ஷாக்கிங் நியூஸ்': மனசை திடப்படுத்திக்கோங்க


பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது என்று கூறி ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும் என்று கமல் கூறும் லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

Twitter-Vijay Television

கமல்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 2ம் தேதி அல்ல மாறாக அக்டோபர் 9ம் தேதி தான் பிரமாண்டமாக துவங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த பார்வையாளர்களோ, உங்களுக்கும் 9 தான் ராசியா பிக் பாஸ் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

போட்டியாளர்கள்

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, யூடியூப் பிரபலம் உள்பட 7 போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டார்களாம். போட்டியாளர்களின் பட்டியலை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியிட மாட்டார் பிக் பாஸ் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் போட்டியாளர்கள் பட்டியல் இது என்று போலி பட்டியல் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின், சிவாங்கியை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து எங்களை எல்லாம் சிரிக்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள் பார்வையாளர்கள். மேலும் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை அழைத்து வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி