ஆப்நகரம்

Bigg Boss 4 Promo: மீண்டும் குரூப்பிஸமா.. ரியோ - ஆரி வாக்குவாதம்

ரியோ மற்றும் ஆரி இடையே குரூப்பிஸம் தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது.

Samayam Tamil 24 Dec 2020, 3:24 pm
பிக் பாஸ் 4ல் அர்ச்சனா சேர்ந்து வைத்திருந்த கேங்கில் பாதி எலிமினேட் ஆனாலும் இன்னும் குரூப்பிஸம் பற்றிய பிரச்சனை இன்னும் குறைந்த பாடில்லை. இன்று இது பற்றி வாக்குவாதம் ஆரி மற்றும் ரியோ இடையே நடைபெற்று இருக்கிறது.
Samayam Tamil Aari and Rio fight in Bigg Boss


இந்த வாரம் நடத்த டாஸ்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடிய போட்டியாளரை தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என சொல்லப்பட்டது. அதற்காக வாக்குவாதம் நடந்தபோது அனிதா - பாலாஜி இடையே சண்டை நடந்ததை இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் பார்த்தோம்.

அதே போல முன்றாவது ப்ரொமோவில் ஆரி மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடைபெற்றது. 'Too many questions, too many arguments' என்று ஆரி பற்றி ரியோ சொன்னார். அவர்கள் கேள்வி கேட்டதால் வந்த வாக்குவாதம் அது என அதற்கு விளக்கம் கொடுத்த ஆரி அதன்பின் ரியோ குரூப்பிஸம் செய்கிறார் என குற்றம்சாட்டினார்.

விதிகள் உள்ள புக்கில் அப்படி குறிப்பிடவே இல்லை என ரியோ சொல்ல, "கூட்டமாக விளையாடாதீர்கள் என அதில் உள்ளது, ஆங்கிலத்தில் அது தான் அர்த்தம்" என ஆரி அவருக்கு நோஸ் கட் கொடுக்கிறார்.

அடுத்த செய்தி