ஆப்நகரம்

Bigg Boss 4 Tamil Promo: அடிச்சி விளையாடலாம்னா நான் ரெடி.. ஆரி - சோம் மோதல்

பிக் பாஸ் 4 போட்டியாளர்களுக்கு பந்தை பிடிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதிலும் ஆரி மற்றும் சோம் இடையே சண்டை வெடித்து இருக்கிறது.

Samayam Tamil 22 Dec 2020, 4:11 pm
பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து அர்ச்சனா கேங் மற்றும் ஆரி, பாலாஜி முருகதாஸ் போன்றவர்களுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அன்பு கேங் கேங்கில் இருந்து அர்ச்சனா, நிஷா, ரமேஷ் போன்றவர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது சோம், ரியோ, கேபி ஆகியோர் மட்டுமே இருக்கின்றனர்
Samayam Tamil Aari and Som fight


ஆனாலும் ஆரி உடனான சண்டை மட்டும் இன்னும் நிற்கவே இல்லை. அர்ச்சனா வெளியே போனதற்கு ஆரியை ரியோ - சோம் கோபத்துடன் திட்டியதையும் நாம் பார்த்தோம்.

போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வழங்கப்பட்டிருக்கும் பால் கேட்ச் விளையாட்டிலும் அவர்களுக்கு ஆரியுடன் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. தலைக்கு மேலே வைக்கப்பட்டு இருக்கும் ஒரு டாஸ்க் செட் அப்பில் இருந்து பந்து வெளியில் வரும். அதை எந்த அணி பிடிக்கிறதோ அவர்களுக்கு தான் மதிப்பெண் கிடைக்கும். அப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்து இருக்கிறது.

அது தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

மணி அடித்தவுடன் உள்ளே இருக்கும் அனைவரும் மிகவும் வேகமாக பந்தை பிடிப்பதற்காக வெளியில் ஓடுகிறார்கள். அங்கு அனைவரும் பந்தை பிடிப்பதற்காக கையை தூக்கி கொண்டு நின்று கொண்டிருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரியோ கீழே விழுந்து விட்டார். அதன்பின் சோம் மற்றும் ஆரி இடையே சண்டை வெடித்தது.

"எப்படி வேண்டுமானாலும் அடித்து பிடித்து விளையாடலாம் என்றால் நான் விளையாட ரெடி" என்று ஆரி சொல்ல, 'அடிச்சு புடிச்சு விளையாடலாம் என சொன்னால் என்ன அர்த்தம்' என சோம் கேட்டார். இப்படி தொடங்கிய வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறி விட்டது. அடுத்து நான் காட்டுகிறேன் இப்போ என கோபத்துடன் தெரிவித்திருக்கிறார் ஆரி.


இதை பார்க்கும்போது ரியோ அணியுடன் ஆரி இன்று பெரிய அளவில் சண்டை போட்டு இருப்பார் என்று தெரிகிறது.

ஏற்கனவே இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் ஆரியுடன் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி