ஆப்நகரம்

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அபிஷேக்.. கலாய்த்த கமல்! பிக் பாஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ

நீங்க நிஜமாவே பிக் பாஸ் ஷோ பார்த்து இல்லையா என இன்று கமல்ஹாசன் அபிஷேக் ராஜாவிடம் கேட்டிருக்கிறார்.

Samayam Tamil 23 Oct 2021, 6:39 pm

ஹைலைட்ஸ்:

  • நான் ப்ரோமோ தான் பார்த்திருக்கேன், ஷோ பார்த்து இல்லை: அபிஷேக்
  • என்கிட்டே மாத்தி மாத்தி பேசலையே: கமல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Abishek Raaja Bigg Boss 5
அபிஷேக் ராஜா கடந்த வாரம் கமல்ஹாசனிடம் தான் இதற்கு முன்பு பிக் பாஸ் பார்த்ததே இல்லை என கூறி இருந்தார். ஆனால் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் அவர் ஷோ பற்றி எல்லாம் தெரிந்தவர் போலவே பேசினார். நான் டாப் 5ல் வர வேண்டும், இந்த சீசன் லாஸ்லியா மதுமிதாதான் என அவர் கூறி இருந்தார். ஷோ பார்க்கலாம் இதை எல்லாம் அபிஷேக் எப்படி சொன்னார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் அபிஷேக்கிடம் "அபிஷேக் எனக்கு ஒரு சந்தேகம், நிஜமாவே இங்க வரும் முன்பு பிக் பாஸ் பார்த்தது இல்லையா?” என கேட்கிறார். ”சத்தியமா பார்த்தது இல்லை சார். நீங்க வீக் எண்டு வருவது மட்டும் லைட்டாக பார்த்திருக்கேன் சார்” என அபிஷேக் சொல்கிறார்.

’அப்போ கொஞ்சம் பார்த்திருக்கீங்க அப்படித்தானே’ என கமல் கலாய்க்க 'ப்ரோமோ தான் சார், ஷோ நான் பார்த்ததே இல்லை' என சொல்லி சமாளிக்கிறார்.

"டாப் 5 format வரை நீங்கள் யோசிச்சி சொல்லி இருக்கீங்க, என்கிட்டே ஒன்னும் மாத்தி மாத்தி பேசலையே" என கூறி கிண்டல் செய்து இருக்கிறார் கமல்.

அடுத்த செய்தி