ஆப்நகரம்

நான் குழந்தை இல்லை, எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. அனிதாவை மீம் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அனிதா சம்பத்தை ட்ரோல் செய்து அதிகம் மீம்கள் தற்போது உலா வருகின்றன. அப்படி என்ன அவர் செய்தார் என நீங்களே பாருங்கள்.

Samayam Tamil 20 Oct 2020, 4:47 pm
பிக் பாஸ் 4 துவங்கிய நாளில் இருந்தே நெட்டிசன்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்ட்டாக இருந்து வருகிறது அது. கொரோனா காரணமாக பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு சரியான நேரத்தில் பிக் பாஸ் கிடைத்தது.
Samayam Tamil Anitha Sampath (Pic Credits: Hotstar)


சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் பற்றிய விவாதம் மற்றும் மீம்கள் தான் அதிகம் தற்போது பரவி வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை கலாய்த்து அதிகம் அளவு ட்ரோல்கள் மற்றும் மீம்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார் அனிதா சம்பத்.

நேற்றைய பிக் பாஸ் ஷோவில் அவர் பேசிய ஒரு விஷயத்தை தான் தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். நேற்று நடந்த டாஸ்கில் ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அந்த டாஸ்கில் சுரேஷ் உடன் இருந்த ஆரி மற்றும் அனிதா ஆகியோர் அதற்கு பிறகு ரியோவிடம் பேசி விளக்கம் அளிக்க முயன்றனர்.

அப்போது ஆரி தான் அதிகம் பேசிக்கொண்டு இருந்தார், ரியோ அதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தார். அப்போது அனிதாவும் இடையில் பேச முயன்றார், ஆனால் ஆரி நிறுத்துவதாக இல்லை, ரியோவும் அனிதாவை மதித்து கேட்கவில்லை. அதனால் அனிதா கோபம் ஆகி "நான் எப்போது பேசுவது. நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது" என கூறினார்.

மேலும் பேசிய அனிதா என் கணவர் மட்டும் பிக் பாஸ் வந்திருந்தால் அவர் தான் வின்னர் என்றும் கூறினார். இதை பார்த்த நெட்டிசன்கள் அது பற்றி மீம் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்.






அடுத்த செய்தி