பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தான் நிறைவுபெற்றது. சென்ற வருடம் கொரோனா தாக்குதல் ஏற்பட்டதால் மிகவும் தாமதமாக அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் 4 துவங்கியது. அதனால் அந்த சீசன் முடிய 2021 ஜனவரி வரை எடுத்துக்கொண்டது. ஆனால் அடுத்த சீசன் வழக்கம்போல ஜூன் மாதம் தொடங்கப்படும் என தெரிகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடந்து வருவதாக தெரிகிறது. ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வர பல முன்னணி சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொகுப்பாளர் VJ அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் 'பிக் பாஸ் 5ல் தயவுசெய்து கலந்துகொள்ளுங்கள். உங்களை கமல் சாருடன் பார்க்க வேண்டும். மேலும் உங்கள் குழந்தையையும் குடும்ப வாரத்தில் பார்க்க வேண்டும்' என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த அஞ்சனா. "I cant be away from Him for that long' என பதில் அளித்து உள்ளார். குழந்தையை பிரிந்து அவ்வளவு நாட்கள் இருக்க முடியாது என்பதை தான் அவர் இப்படி கூறி உள்ளார்.
அஞ்சனாவின் இந்த பதில் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது.