ஆப்நகரம்

திவ்யா கணேஷ் பிக் பாஸ் செல்கிறாரா? அப்போ பாக்கியலட்சுமி சீரியல்..

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஜெனி நடிகை திவ்யா கணேஷ் பிக் பாஸ் செல்ல இருப்பதாக செய்தி பாரவ தொடங்கி இருக்கிறது. அவரது லைவ் வீடியோ தான் இப்படி ஒரு தகவல் பரவ காரணம்,

Samayam Tamil 23 Sep 2021, 3:51 am
ஜெனி பிக் பாஸ் செல்கிறாரோ என பரவும் தகவல். அப்போது பாக்யலக்ஷ்மி தொடரில் இருந்து விலகுகிறாரா என கேட்கும் நெட்டிசன்கள்.
Samayam Tamil baakiyalakshmi serial jeni divya ganesh speculated to enter bigg boss 5
திவ்யா கணேஷ் பிக் பாஸ் செல்கிறாரா? அப்போ பாக்கியலட்சுமி சீரியல்..


ஜெனி 'திவ்யா கணேஷ்'

ஜெனி என்கிற கதாபாத்திரம் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த ஒன்று. சமீப காலமாக மிக அதிக முக்கியத்துவம் ஜெனி கதாபாத்திரத்திற்கு கிடைத்து வருகிறது. அவர் கர்ப்பமாக இருப்பது போலவும் சீரியல் கதை நகர்ந்து வருகிறது.

ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு அதிகம் ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். அவருக்கு ஒரு பெரிய ஆர்மியே இன்ஸ்டாக்ராமில் இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை பெற்று இருக்கிறார் அவர்.

பிக் பாஸ் சொல்கிறாரா?

திவ்யா கணேஷ் பிக் பாஸ் 5 செல்ல இருப்பதாக தகவல் தற்போது பரவி வருகிறது. சமீபத்தில் ஷகீலா மகள் மிலாவின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திவ்யா கணேஷ் வீடியோவில் பேசி இருக்கிறார். அப்போது அவர் திவ்யா கணேஷ் பிக் பாஸ் செல்ல இருப்பதாக கூறுகிறார் மலா . 'ஆமா நான் தான் போறேன்' என திவ்யா சொல்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதனால் தான் திவ்யா கணேஷ் பற்றி செய்தி பரவ தொடங்கி இருக்கிறது. மிலா பிக் பாஸ் செல்வதை தான் அவரகள் இப்படி மாறி மறைமுகமாக பேசி இருக்கிறார்களோ.

வீடியோ

View this post on Instagram A post shared by divyaganesh (@divya_ganesh_official)

அடுத்த செய்தி