ஆப்நகரம்

Episode 19: பிக் பாஸ் வீட்டில் மகத்துக்கு அட்வைஸ்.. நீ எதுக்கும் ஹாஸ்பிட்டல் போ..

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோபத்தின் உச்சிக்கு மகத் செல்ல, அவருக்கு சென்ட்ராயன் அறிவுரை வழங்கி பேச்சை முடித்துக் கொண்டார்.

Samayam Tamil 6 Jul 2018, 11:39 pm
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோபத்தின் உச்சிக்கு மகத் செல்ல, அவருக்கு சென்ட்ராயன் அறிவுரை வழங்கி பேச்சை முடித்துக் கொண்டார்.
Samayam Tamil magath cendrayan



முந்தைய எபிசோட்டை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


இன்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 19வது எபிசோட்டில், நேற்ற தண்ணியில கண்டம் டாஸ்க் நிறைவு பெற்ற நிலையில், மகத் கோபத்தின் உச்சத்தில் தான் காணப்பட்டார். குறிப்பாக சென்ட்ராயன் மீது அவருக்கு தனிப்பட்ட பிரியம் போலும். சின்னஞ்சிறு விஷயத்துக்கு எல்லாம் கோபப்பட்ட மகத், ஒரு கட்டத்தில் சென்ட்ராயனும் திருப்பிப் பேசத் தொடங்கினார். மகத்தின் நிலையுணர்ந்த சென்ட்ராயன், நான் இனி பேசமாட்டேன், நீயும் பேச வேண்டாம் என்று கூறி நகர்ந்து சென்றார். ஆனால், அதற்கு மகத், நான் அப்படி தான் பேசுவேன், நீ கிறுக்கன் என்று புலம்பித் தள்ளினார்.

(பிக் பாஸ் தொடரின் அனைத்து எபிசோட்களையும் பார்க்க..)

பின்னர், சிறிது நேரம் கழித்து மகத் அமைதி நிலைக்கு வந்த பின் மீண்டும் சென்ட்ராயன் அவரிடம் சென்று, ‘நீ அதிகமாக கோபப்படுகிறாய், அந்த நேரத்தில் நீ என்ன பேசுகிறாய் என்று உனக்கே தெரியவில்லை. இது சரியில்லை. நீ எதற்கும் டாக்டரிடம் சென்று செக் செய்து கொள். உன்னிடம் பேசுவது எனக்கு சரியில்லை’ என்று கூறினார். அதற்கு மகத் ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. இப்படியே போனால் யாரிடமும் பேச முடியாது. நீ முதல்ல ஒழுங்கா நடந்துக்கோ’ என்று கூறினார். மேலும், சென்டராயனின் நடவடிக்கைகளை குறித்து தனக்கு அட்வைஸ் செய்ததைப் பற்றியும் பிறரிடம் மகத் கேலி பேசினார்.


(பிக் பாஸ் தொடரின் அனைத்து எபிசோட்களையும் பார்க்க..)

அடுத்த செய்தி